பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்Tag: நாடாளுமன்றம்
லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு…
View More லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?
அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
View More ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?
2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?
View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு
(எழுதியவர்: வி. சண்முகநாதன், பா.ஜ.க செயலர்) நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே, சி.பி,ஐ யினை துஷ்பிரயோஒகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
View More சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு