முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)
View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்Tag: நாலந்தா
வன்முறையே வரலாறாய்… – 9
கல்வியிலும், கணிதத்திலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் உலகிற்கே ஒளியூட்டிக் கொண்டிருந்த இந்தியா இஸ்லாமிய காலனியாதிக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. கல்வியறிவே இல்லாத மூடர்களான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கே உரித்தான, அற்புதமான கல்விமுறையைச் சிதைத்து அழித்தார்கள்… இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் காஃபிர்களின் பள்ளிகளை இடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம், காலிஃபா ஓமாரால் 641-ஆம் வருடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1197-ஆம் வருடம் மூடனான பக்தியார் கில்ஜி நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்ததுடன், அங்கிருந்த பவுத்த பிட்சுகளான ஆசிரியர்களையும், மாணவர்களையும் படுகொலை செய்ததுடன், விலை மதிக்க முடியாத புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான்… இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியப் பள்ளிகளை மட்டுமே கட்டினார்கள். முக்தாப் மற்றும் மதரசா என்று அழைக்கப்பட்ட இப்பள்ளிகள் பெரும்பாலும் மசூதிகளுடன் இணைந்தே இருந்தன. அங்கே படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு மத போதனையும், ராணுவ மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன. அரபி படிப்பதும், குரானை மனப்பாடம் செய்வதும், “இறைதூதரின்” வாழ்க்கைமுறையும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களும் மட்டுமே அங்கு பிரதானமான கல்வியாக இருந்தது….
View More வன்முறையே வரலாறாய்… – 9