சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…

அம்புலிமாமாவை எடுத்துக் கொள்ளுங்கள். மிக எளிதாக ‘அம்புலிமாமா’ கதை என இப்போது சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் ’அம்புலிமாமா’ என்பது அப்படி வளர்ந்தவர்களின் சின்னத்தனத்துடன் ஒப்பிடக் கூடிய சமாச்சாரமே அல்ல. கிழக்கு கடற்கரையில் பிரதீபத்தை தலை நகராக கொண்டு ஆண்ட சந்திரத்வஜனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? … காந்தி-நேரு அதிகார அமைப்பால் பாரதத்தின் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட தேசபக்தர்களை -பாகா ஜதீன் முதல் படேல் வரை- சித்திர கதை வடிவாக சிறுவர்களுக்கு அளித்தது அம்புலிமாமா. அது மட்டுமல்ல….

View More சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…

புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்

புதுக்கோட்டையில் திருகோகர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள்… அழகாகப் பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்குத் தன் சொந்தக் காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்…. இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை… மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்…

View More புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி

பிரபல எழுத்தாளர் மதன் ‘வந்தார்கள், வென்றார்கள்’ தொடரை ஆனந்த விகடனில் எழுதியபோது, முகலாயர்களின் அட்டூழியத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்டார். வார்த்தையில் ‘எனது இந்தியா’ கட்டுரையை எழுதியதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிரட்டல்கள் வந்தன. […]கீழக்கரையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்ற செய்திக்காக ‘நிமிர்ந்த நன்னடை’ தினமணியும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி

கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

View More கள்ளக் காதல்

வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.

View More வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03