சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…

morning_hindutvaநாம் விடுதலை பெறுவதற்கு வெகு நாட்கள் முன்னர் நடந்த சம்பவம் இது. இடம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி. ஒரு இலக்கிய வகுப்பு. நடத்துபவர் பேராசிரியர் மில்லர். ஆல்ப்ரெட் டென்னிசனின் அழகிய கவிதை ஒன்றை விளக்கி சொல்கிறார் பேராசியர். படகு நதியில் செல்கிறது. இரு பக்கங்களிலும் துடுப்புகள் தள்ளப்பட நதியில் அந்த படகு செல்வது அன்னம் இரு சிறகுகளையும் வீசி செல்வதை ஒத்து இருக்கிறது. இந்த வரிகளை கூறிவிட்டு பேராசிரியர் ஆங்கில மொழியின் இந்த உயர்ந்த கவிதை வர்ணனை அழகை தாம் வேறெந்த மொழியிலும் கண்டதில்லை என்கிறார். ஏன் தமிழில் கூட இப்படி ஒரு பாடல் இருக்குமா என்பது ஐயப்பாடே என்கிறார். மாணவர்கள் மத்தியிலிருந்து ஒரு கை உயர்கிறது. கைக்குரிய மாணவன் எழுந்து நிற்கிறான்.  பணிவுடன் ஆனால் திடமாக சொல்கிறான்: ”ஐயா நீங்கள் சொல்வது தவறு. டென்னிஸனுக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் கவி சக்கரவர்த்தியாக போற்றும் கம்பர் பெருமான் இதே உயர் வர்ணனை கொண்ட பாடலை பாடியிருக்கிறார்.” parithimalபேராசிரியர் அந்த பாடலை கேட்கிறார். உடனடியாக தாமதம் இன்றி வருகிறது, கம்பனின் இராமகாதையின் அயோத்தியா காண்டத்தில் குகப்படலத்தில் உள்ள அந்த பாடல்:

விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,

முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;

கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்

அம்மாணவன்தான் பின்னாட்களில் தணியாத தமிழ் பற்றால் தன் சூரிய நாராயண சாஸ்திரி எனும் தன் பெயரை  பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். பி.ஏ. தேர்வில் தமிழில் முதன்மையாக  வந்து பாஸ்கர சேதுபதி பதக்கம் வென்ற அந்த அறிஞர் துரதிர்ஷ்டவசமாக முப்பத்திரண்டாம் வயதிலேயே அமரத்துவம் அடைந்தார். இந்த சம்பவம் மனதில் வரும் போதெல்லாம் மற்றொரு சித்திரமும் தவிர்க்கவே இயலாமல் மனதில் எழும்.

1970களில் வளர்ந்த நடுத்தர குடும்ப சிறுவர்களுக்கு ஒரு ராமாயணம் மிகவும் பிரசித்தி. ‘சித்திர ராமாயணம்’ என்று பெயர். முல்லை தங்கராசன் பதிப்பாசிரியராக வெளியிட்டது.

cr2

சித்திரங்கள் வினு. வண்ண சித்திர படக்கதையாக முல்லை தங்கராசன் ராமாயணத்தை தந்திருந்தார். ஒரு தலைமுறைக்கு டிவி ராமாயணத் தொடருக்கு முன்னால் ராமர் சீதை ஹனுமான் என்றால் மனக்கண் முன்னர் வருவது வினுவின் ராமாயண பாத்திரங்களேதான்.  ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை கொண்ட கம்பீரத்துடன் தீட்டப்பட்டிருக்கும்.

இந்த சித்திர ராமாயணத்தில் ராமர், லட்சுணர், cr1சீதை ஆகியோர் குகனின்  ஓடத்தில் கங்கையை கடக்கும் சித்திரம் வெளிவந்திருந்தது.  வினு அதில் குகனின் ஓடத்துடன் ஒரு அன்னம் செல்வதையும் காட்டியிருந்தார்.

சிறுவர்கள் வாசிக்கும் ராமாயணத்துக்கு தீட்டப்பட்ட ஓவியத்தில் கூட கம்பனை கோடி காட்டிய ஒரு ஓவியரின் அன்பு.   70 களின் சிறுவர் இலக்கியங்கள் அனைத்திலும் இவற்றை நாம் காண முடியும். சிறுவனின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான விதையை உள்ளடக்கியே சிறுவர் கதைகள் உருவாக்கப்பட்டன.

சித்திர ராமாயணம் படித்து வளர்ந்த சிறுவன் கம்பனை வாசிக்கும் போது அவனால் நிச்சயமாக கம்பன் காட்டும் உலகில் பழகிய ஒரு இடம் போல இயல்பாக உள் நுழைய முடியும். கந்த புராணத்தையும் இதை போல அழகிய சித்திர கதையாக அளித்தார் முல்லை தங்கராசன். கிருபானந்த வாரியாரின் தாக்கம் அந்த சித்திர கதையில் தெளிவாக இருந்தது.

திருமுருக கிருபானந்த வாரியார் கோகுலத்தில் தொடராக எழுதிய கண்ணன் கனியமுது, பிள்ளையார் பெருமை, அறநெறி ஆகிய தொடர்கள்  பௌராணிகமும், சமய தத்துவமும், மதிப்பீடுகளும் என சரியான விதத்தில் கலந்து சுவையாக அளிக்கப்பட்ட சிறுவர் இலக்கியம். கோகுலத்தின் இலச்சினையே பாரதத்தின் குழந்தை போற்றுதலின் கச்சிதமான வடிவமாக அமைந்திருந்தது.

gokulam0

விநாயகரும் கண்ணனும் பாரதியின் வரிகளுடன்.  கௌசிகன் எழுதிய தேசபக்தி ஊட்டும் தேசபக்தர்கள் குறித்த சரிதங்கள் படிக்கும் குழந்தைகளின் உள்ளங்களில் தேசத்தின் மீது அணையாத அன்பை ஏற்றி வைத்தன. ராஜாஜி 1932 இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரம் நிறுவி நடத்தி வந்த போது ஆத்திச்சூடிக்கு உரை எழுதினார். கோகுலம் தொடங்கப்பட்ட போது அதன் கையெழுத்து பிரதியை சதாசிவம் அவர்கள் கண்டெடுத்தார். ராஜாஜியின் சம்மதத்துடன் அது கோகுலத்தில் தொடராக வந்தது. அதிலிருந்து சில:

 ‘கெடுப்பதொழி’:
யாதாயினுமொன்று உனக்கு கேடு செய்வது என்று அறிந்த பின் , அது எவ்வளவு பழையாதாயினும், தள்ளுவது வருத்தமாயினும், தள்ளியே தீர வேண்டும்.

’நெற் பயிர் விளை’: நெல் விளைவிப்பாயாக. முக்கியமான பயிராகிய நெல் ஒன்றைச் சொன்னதினால் ஆகாரத்துக்கு வேண்டிய மற்ற தானிய வகைகளையும் சொன்னதாகவே வைத்து கொள்ள வேண்டும். உழுது பயிர் செய்து உணவுப் பண்டங்களை உருவாக்குதல் கடமையாகும். உழுது பயிர் செய்தல் மேன்மையான தொழில்.

அன்றைய krishtoonதமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகள் வாரியாராகட்டும் ராஜாஜியாகட்டும் கொஞ்சமும் தங்களை முன்னிறுத்தாமல் சிறார்களுக்கென்றே எளிமையும் இனிமையுமாக கோகுலத்தில் வெளிப்பட்டார்கள். தேச-தேச கதைகள் எனும் பெயரில் உலக நாட்டார் கதைகளை தமிழ் குழந்தைகளுக்கு கொண்டு வந்து தந்தார் ’வாண்டு மாமா’. கண்ணனை உரிமையுடனான கேலி கூட செய்திருக்கிறது கோகுலம். இன்றைக்கு இணைய இந்துத்துவர்கள் ஒரு சிலர் அதற்காக ஆத்திரம் கூட அடையக் கூடும். அறிவியல் தொடர்கள், நகைச்சுவை தொடர்கள்,சித்திரத் தொடர்கள்,  தாமே செய்யும் பரிசோதனைகள் என ஒரு முழுமையான குழந்தைகள் பத்திரிகையாக கோகுலம் நிச்சயமாக ஒரு முன்னோடி என்றே சொல்ல வேண்டும்.  குறிப்பாக கௌசிகனின் சித்திரத் தொடர் வீராதிவீரன் 1971 இந்திய பாகிஸ்தானிய போரை பின்புலமாகக் கொண்டது. ரஹீம் எனும் சிறுவனும் அவனது தோழர்களும் எப்படி அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானிய ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக முக்திவாஹினிக்கு ஆதரவாக புரட்சி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒட்டு மொத்தத்தில் ஒரு சிறுவன்/சிறுமி  தன் பண்பாட்டை, வரலாற்றை நவீன சூழலில் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு முழுமை பயிற்சியை கோகுலம் அளித்தது.

அம்புலிமாமாவை எடுத்துக் கொள்ளுங்கள். மிக எளிதாக ‘அம்புலிமாமா’ கதை என இப்போது சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில்  ’அம்புலிமாமா’ என்பது அப்படி ஒன்றும் பெரியவர்களின்  சின்னத்தனத்துடன் ஒப்பிடக் கூடிய சில்லறை சமாச்சாரமே அல்ல.

கிழக்கு கடற்கரையில் பிரதீபத்தை தலை நகராக கொண்டு ஆண்ட சந்திரத்வஜனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ambuli2வீரவிருஷபர்கள் என அழைக்கப்பட்ட மன்னர் குலத்தைச் சார்ந்தவன் . கடற்போரில் வல்லவர்கள் இவர்கள்.  வனவாசி சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட போது மிகப் பெரிய அளவில் கனோஜி ஆங்க்ரே போலவே வெள்ளையருக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தியவர்கள். சந்திரத்வஜன்  தியானம் செய்யும் போது கோழைத்தனமாக வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டான். அதன் பின்னர் அவன் பாராமதிக் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்ட போது அவனை அவனது மக்கள் விடுதலை செய்த விதம் நினைத்து பார்க்க முடியாத அற்புதமானது. நீங்கள் அம்புலிமாமா வாசகராக இருந்திருந்தால் கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

காந்தி-நேரு அதிகார அமைப்பால் பாரதத்தின் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட தேசபக்தர்களை -பாகா ஜதீன் முதல் படேல் வரை- சித்திர கதை வடிவாக சிறுவர்களுக்கு அளித்தது அம்புலிமாமா.

jathinஅது மட்டுமல்ல. அம்புலிமாமா அளித்த புராணத் தொடர்களிலும் ஒரு விசேஷம் உண்டு.  பிரச்சனைகளை அல்லது வாழ்வியல் மாற்றங்களை பன்மைத்தன்மையுடன் நெகிழ்ச்சியான புத்தாக்கத்துடன் எதிர்கொள்வதற்கான அடிப்படை பயிற்சியை புராணங்கள் தருகின்றன. இதற்கு புராணங்கள் சரியான விதத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதை அம்புலிமாமாவில் வந்த புராணத் தொடர்கள் செய்தன.  ஒரு உதாரணம் அம்புலிமாமாவில் தொடராக வந்த தேவி பாகவதம். இந்தியாவுக்கு என ஒரு கதை சொல்லும் தன்மை இருக்கிறது.அந்த வடிவங்களை சிறுவர் இலக்கியப் படைப்பில் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறது அம்புலிமாமா அதன் விளைவுதான் ‘வேதாளம் சொல்லும் கதைகள்’.  ஒரு கதை அதற்குள் இருக்கும் சிக்கலை விடுவித்தல் அல்லது புரிந்து கொள்ளுதல் எனும் மனப்பயிற்சியை மிக எளிய விதத்தில் அந்த கதைகள் அளித்தன.

ஒப்பிடுகையில் இன்று சிறுவர் இலக்கிய இதழ்கள் எனும் பிரதேசம்  தமிழ்நாட்டில் பாலையாகவே காணப்படுகிறது. பெரும்பாலான இதழ்கள் படைப்பாக்கங்களைக் காட்டிலும் இணைய தள கூகில் தேடலில் சிக்கும் படங்களையும் மலினமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸையும் நம்பியே செயல்படுகின்றன. கோகுலம் இதழ் கர்ம சிரத்தையாக விநாயகரையும் கண்ணனையும் தனது இலச்சினையிலிருந்தே நீக்கி தம் மதச்சார்பின்மையை நிறுவியுள்ளார்கள். வினு, சங்கர், சித்ரா போன்ற ஜாம்பவான்களின் ஆழ்ந்த கவனிப்புடன் உருவாக்கப்பட்ட சித்திரங்களை காண இயலவில்லை. சிறாருக்கான இதழ்களென்பதே ஏதோ சின்னபிள்ளைத் தனமான விசயம் என்பதாகிவிட்டது. நம் முந்தைய தலைமுறை இதழாளர்கள் அப்படி நினைக்கவில்லை என்பது நமக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதம். சதாசிவமும், முல்லை தங்கராசனும், வாண்டுமாமாவும், வாரியாரும் அகில பாரத அளவில் அனந்த் பையும் நமக்கு வாய்த்திருந்தார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினருக்கும் அதே வரப்பிரசாதம் கிடைக்க வேண்டுமென அந்த பெரியவர்கள் இருக்கும் திசை பார்த்து வணங்குவோம்.

gokulam2

கோகுலம் முதல் இதழில் திரு.சதாசிவம் எழுதியதே மேலே இருப்பது. அன்றைய கோகுலம் இந்த எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்தது. இன்று? … இன்றைக்கு தமிழக ஹிந்துத்துவத்தின் ஒரு முக்கியமான கடமை இது: ஒரு தரமான முழுமையான சிறுவர் இதழ்.

தேநீருடன் மீண்டும் நாளை காலை சந்திப்போம். …

 

20 Replies to “சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…”

  1. ஹிந்டுத்வதை எழுதுபவர்கள் ஹிந்துத்வம் மட்டும் இருக்கலாமே? ஒரு சாதியை மட்டும் தூக்கி பிடிக்க கூடாது.

  2. மாமாவின் பிறந்த தினத்தில், அம்புலிமாமாவை பற்றிய உண்மைகளை வெளியிட்டு பெருமை சேர்த்த ஆ.நீ.க்கு நன்றி.

    குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்த கோகுலம், இனிமேலும் அப்பணியை செய்ய ஊக்கமளிப்போம்.

    //இன்று சிறுவர் இலக்கிய இதழ்கள் எனும் பிரதேசம் தமிழ்நாட்டில் பாலையாகவே காணப்படுகிறது//

    சிந்திக்க வேண்டிய தகவல்.

    சீனு, ஈரோடு.

  3. பெரியவர்களின் மனம் கவர்ந்த அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைப்போல சிறு குழந்தைகளின் மனம்கவர்ந்தது அம்புலிமாமா. அதிலும் வாண்டுமாமா அவர்களின் படக்கதைகள் அந்தக் காலத்தில் சிறுவர்களின் மனம் கவர்ந்தவை. இன்றுவரையிலும் அம்புலிமாமாவும், சந்தமாமா க்ரூப்பும் சிறந்த தொண்டாற்றுகின்றன. கலைமகள் பத்திரிகை குழுமத்தை சேர்ந்த கண்ணன் என்ற சிறுவர் பத்திரிக்கையும் சிறந்த பணியாற்றியது. ” காவேரியின் அன்பு “- என்ற கதை என்மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

  4. வணக்கம்
    திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் அள்ளித் தரும் கருத்துக் கருவூலங்கள்
    போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை அன்னாருக்கும் பதிவிட்ட்ட ஹிந்து தளத்திற்கும் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    அன்புடன்
    நந்திதா

  5. ஏக்கம் தரும் பதிவு.. நானெல்லாம் இவற்றை நினைவுகளாக நெஞ்சில் தான் சேமித்து வைத்திருக்கிறேன். அ.நீ பௌதீக இருப்பாக வீட்டிலேயே சேமித்து வைத்திருக்கிறார்!

  6. அன்புள்ள அநீ, இன்றைய பொழுதுக்கு எனக்கு இதுபோதும். நான் முதல்முதலில் வாசித்ததும் கோகுலம்தான். முதல் முதலில் வேலை பார்த்ததும் கோகுலத்துக்குத்தான். btw எனது கோகுலம் சிறுவர் சங்க உறுப்பினர் எண் கூட எனக்கு நினைவிருக்கிறது. 822!

  7. \\\ ஹிந்டுத்வதை எழுதுபவர்கள் ஹிந்துத்வம் மட்டும் இருக்கலாமே? ஒரு சாதியை மட்டும் தூக்கி பிடிக்க கூடாது. \\\

    முற்றிலும் சரி.

    இங்கு ஸ்ரீ அ.நீ அவர்கள் நீங்கள் சொல்லியதிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்று மட்டுமின்றி தேசத்துக்குச் சேவை செய்த மாற்றுமதத்தைச் சார்ந்தவர்களைப் பற்றியும் விதந்தோதியுள்ளார்.

    பரிதிமாற் கலைஞர், கல்கி சதாசிவம், ராஜாஜி, முல்லை தங்கராசன், திருமுருக க்ருபானந்த வாரியார் ஸ்வாமிகள், வினு, சங்கர், சித்ரா – படைப்பாளிகளாக வ்யாசம் அடையாளம் காட்டும் இவர்கள் ஒரே ஜாதியில்லை என்று தானே தோன்றுகிறது.

    ராமாயணம், கந்தபுராணம், — ஹிந்துஸ்தானம் முழுதும் தழுவிய காவ்யங்கள். வடக்கு சார்பு தெற்கு சார்பு என்று பக்ஷபாதமில்லை.

    சீதாராம லக்ஷ்மண, குகன், ரஹீம் என்ற முஸல்மாணிய பாத்ரம், வனவாசி சமுதாயத்தைச் சேர்ந்த மன்னனான சந்த்ரத்வஜன், பாகா ஜதீன் — ஸ்ரீ அ.நீ சுட்டிய இந்த பாத்ரங்கள் ஒரே ஜாதியை மட்டுமல்ல — மாற்று மதத்தையும் கூட சார்ந்த அன்பர்களாகக் காணக்கிட்டுகிறார்களே.

    இந்த புஸ்தகங்களுடன் என் சிறு வயதில் பெரியோர் வாசிக்கச் சொன்ன இன்னொரு சஞ்சிகையான மிகவும் ப்ரபலமான “Wisdom” என்ற சஞ்சிகையையும் நினைவு கூர்கிறேன்.

    சித்திரம் வரைபவர்கள் சரித்ர கதாபாத்ரமாகட்டும் புராண கதாபாத்ரங்களாகட்டும் எந்த ஒரு தனிமனிதரையும் அடையாளம் காண்பிக்காத படிக்கு தனித்த லக்ஷணங்களுடன் இந்த பாத்திரங்களைச் சித்திரங்களாக வரைவதில் கவனம் செலுத்தினர் என்பதையும் நினைவு கூர்கிறேன்.

    அம்புலி மாமா, வாண்டு மாமா போன்று அணில் அண்ணா என்ற சஞ்சிகையும் நினைவில் வருகிறது. மங்கிப் போன பழைய நினைவுகளை ரசமிக மீட்டெடுத்த ஸ்ரீ அ.நீ அவர்களுக்கு நன்றி.

  8. புத்தகம் படிக்கும் ஆர்வத்தையும், பெரிய பெரிய கதைகளை படிக்கும் ஆர்வத்தையும் தூண்டியதில் முக்கிய பங்கு இப்புத்தகங்களுக்கு உண்டு. என் மாமா வீட்டில் தேடினால் கிடைக்குமோ என்னவோ. அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர். இவை கற்று கொடுத்த கதைகள் ஏராளம். இப்போது இதனருகில் சற்றே சற்று நெருங்கிவருவது தினமலர் சிறுவர்மலர் மட்டும். கொஞ்சமாவது நமது இந்து மதக் கதைகளை பற்றி கூறுகின்றது. சுட்டி விகடன் ஹும். சொல்வதற்கில்லை.

  9. முற்றிலும் உண்மை. இன்று கதை சொல்லும் பழக்கம் இல்லாது போனதாலேயே குழந்தைகளுக்குப் பல பிரச்சினைகள்.

  10. அம்புலி மாமா குறித்த பகிர்வுகள் மீண்டும் குழந்தைப் பருவத்தில் கொண்டு விட்டது. கோகுலம் படித்தது இல்லை. ஆனால் நான் குழந்தையாக, சிறுமியாக இருக்கையில் வந்த குழந்தைகள் பத்திரிகையில் “கண்ணன்” மிகவும் பிரபலம். திரு ஆர்வியை ஆசிரியராகக் கொண்டு வந்த நல்ல தரமான பத்திரிகை. கதைகளுக்கும் பஞ்சமிருக்காது. அறிவியல் செய்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. கண்ணன் வாங்குவோரின் வீட்டை முற்றுகை இட்டுக் காத்திருந்து வாங்கிப் படித்த காலம் ஒன்று உண்டு. எல்லார் வீட்டிலும் வாங்க மாட்டார்கள். கலைமகள் பதிப்பகத்தாரால் வெளிவந்த நல்லதொரு பத்திரிகை கண்ணனும், மஞ்சரியும். இப்போது மஞ்சரி வருகிறதா தெரியவில்லை. கலைமகள் வருகிறது. குழந்தைகள் பத்திரிகை என்று பார்த்தாலே இப்போதெல்லாம் ஏதோ ஆங்கிலக் கார்ட்டூன்களைத் தமிழில் படிப்பது போன்ற உணர்வு! :(((((

  11. இதைச் சிறுபிள்ளைகள் சமாசாரம் என்று சொல்ல முடியாது. அடிப்படையே இங்கிருந்து தானே ஆரம்பிக்கிறது. இன்றைய சிறுபிள்ளைகளுக்குத் தேவையான கலாசார அடிப்படையைக் கொடுக்கும் பத்திரிகைகள் இன்று தேடித்தான் பிடிக்கணும். :((((

  12. During my childhood particularly after 6th standard I used to go to nearby public library which is 2kms away from my home along with one more friend only on weekend holidays. After reahing there our first search would be current Ambulimama for which we had competition.Some times other people might be reading it. During this time we read old issues of Ambulimama. If we did not get the Ambulimama for that particular week, we had disappointed like anything. The present day condition is entirely different as the IT growth has reduced the interest of such reading and search. It’s a fine article recollect old memories. Thank you Ji.

  13. அன்புள்ள அ.நீ,

    கோகுலம் பற்றிய இனிய நினைவுகளை தூண்டிவிட்டீர்கள். பிருந்தாவனக்கதையரங்கம், பிருந்தாவனக்கவியரங்கம், பதினாறு பக்க வண்ணப்படக்கதை … மறக்கவியலா அந்த நாட்கள்.

  14. நன்றி திரு அரவிந்தன் முதல் கோகுலம் இதழ் வாசித்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. முல்லை தங்கராஜனின் சித்திர ராமாயணத்தை யாராவது மறு பதிப்பு செய்யலாமே? (ஏன் தமிழ் இந்துவே அதைச் செய்தால் நன்று)

  15. Time has changed. Gokulam has also changed as per the current requirement. Otherwise, it will be a Bhakthi Malar. To reach more, the symbol could have been changed. Why worry for this?

  16. மிக மிக வருத்ததுடன் கேட்கிறேன் அது என்ன “இணைய இந்துத்துவர்கள் “.சற்று மாதங்களுக்கு முன் cnn-ibn தொலைகாட்சி தொகுப்பாளினி “internet hindus” என்ற வாதத்தை முன் வைத்தார்.மக்களின் மிக பெரிய ஆத்திர பின்னோடதிற்கு பிறகு அவர் அந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை.அனால் அரவிந்தன் என்னும் பெரிய ஆளுமை அதை பயன்படுத்துவது மிக மிக வேதனையான ஒன்று.அதென்ன இணைய இந்துத்துவர்கள்,அப்போது நாங்கள் எல்லாம் இந்துத்வத்தை வாழ்கையில் பின்பற்றுவதில்லையா?.எதோ இணையத்தை பார்ப்பதால் எங்களை இது போல் மட்டமாக கேலி செய்வது தவறு என்று தெரியவில்லையா.

  17. //
    g ranganaathan

    நன்றி திரு அரவிந்தன் முதல் கோகுலம் இதழ் வாசித்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. முல்லை தங்கராஜனின் சித்திர ராமாயணத்தை யாராவது மறு பதிப்பு செய்யலாமே? (ஏன் தமிழ் இந்துவே அதைச் செய்தால் நன்று)
    //

    Very true!!!! Tamilhindu can re-publish this chitira ramayanam or any other books. We can buy from them. Today’s kids are very obsessed with TV. I happen to watch some kid programs in Star Vijay and Sun TV.I realise its their parents whom are encouraging those kids to appear on TV.
    Super Singer is one good example how much 7 yr olds are so addicted to cinema songs. And their parents whom are sitting audiences are extremely proud to see this.

    How many of us tell our kids stories from puranas, ramayanam and mahabharath before bed time?
    This habit must start. I would advise everyone to stop watching tv or at least don’t have TV at all.

    My parents are obsessed with TV, so I can’t do anything here. But I don’t watch any programs.

  18. பரிதி மாற் கலைஞனில் தொட்டு கோகுல வசந்தத்தை மீள ஒரு முறை வீசச் செய்த பெருமை எழுத்தாளருக்குரியது… தனித்தமிழ் இயக்கம் குறித்த அவரது பட்ச பேதமற்ற கருத்தையும் அறிய ஆவலாயுள்ளேன்…

  19. Recent issues of Ramakrishna Vijayam, allot more pages for children focussing not only Bhakthi but also children development in other aspects. Pictorial Stories for children collection in Tamil is an excellent one and will be useful for kids.

    Many weekly magazines (during 80s)used to allot 2-4 pages for children but nowadays most magazines do not care articles for children,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *