பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்Tag: பிற்படுத்தப்பட்டவர்கள்
சாதி அரசியல் செய்கிறாரா மோதி?
“மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்” என்று மோதி பதிலடி கொடுத்தார்.. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. “நீச்” என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்…
View More சாதி அரசியல் செய்கிறாரா மோதி?தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4
தமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள்.[..] ஆனால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும் தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர் [..]
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3
நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது.. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால்…80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை..
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3பெரியார் யாருக்குப் பெரியார்?
உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் – தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா? [..]
View More பெரியார் யாருக்குப் பெரியார்?