போகப் போகத் தெரியும்-12

‘ஹரிஜனப் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம். ஹரிஜனங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது…’ என்பதெல்லாம் பெரியாரின் அபிப்பிராயம் என்பது கருணாநிதியின் கருத்து. இதைக் கருணாநிதியிடமே கேட்டு வீரமணி தெரிந்து கொள்ளட்டுமே…

View More போகப் போகத் தெரியும்-12

போகப் போகத் தெரியும்-11

சனாதன இந்து என்பதில் பெருமைப்படுவது, தீண்டாமையை நிராகரிப்பது, பிராமணர்களின் பங்கை அங்கீகரிப்பது, பிராமணரல்லலதார் சார்பில் கூறப்படும் குறைபாடுகளும் சில நியாயமானவை என்று உணர்வது ஆகியவை காந்தியச் சிந்தனையின் அடித்தளமாக இருந்தன…

வைக்கம் போராட்டத்தை காந்திஜி ஆதரித்தார், காங்கிரஸ் ஆதரித்தது, முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் ஆதரித்தனர்…

View More போகப் போகத் தெரியும்-11

போகப் போகத் தெரியும் – 9

இனி வைக்கத்துக்கு வருவோம். வைக்கத்தில் (1924) ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. அதன் விளைவாக சகுனம் முதல் சனாதனம் வரை எல்லாம் ஆடிப் போய்விட்டது என்று வலுவான பிரசாரம் இங்கே நடக்கிறது. அது சரியல்ல என்று தெரிவிப்பதுவே இந்தத் தொடரின் நோக்கங்களில் ஒன்று. சரியல்ல என்றால் நியாயமானதல்ல என்று ஒருமுறையும் பொய்கலந்தது என்று ஒருமுறையும் சொல்லிக் கொள்ளவும்.

View More போகப் போகத் தெரியும் – 9

போகப் போகத் தெரியும் – 8

அடாவடிகளை அறிக்கைகளாகவும், தவறான தகவல்களைத் தத்துவங்களாகவும் அரைகுறைப் படிப்பை அநுபூதியாகவும் கொண்டு வளர்ந்ததே ஈ.வே.ரா.வால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம்.

View More போகப் போகத் தெரியும் – 8

போகப் போகத் தெரியும் – 6

பெரிய புராணத்தையும் கம்ப ராமாயணத்தையும் எரிக்கச் சொல்லி உத்தரவு போட்டவர் ஈ.வே.ரா.

ஈ.வே.ரா.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைமலை அடிகள் “பெரிய புராணத்தை எரிப்பேன் என்று சொன்ன பெரியாரின் குடலைக் கிழித்து மாலையாகப் போடுவேன்” என்றார்…

View More போகப் போகத் தெரியும் – 6

போகப் போகத் தெரியும் – 5

பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.

மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை…

View More போகப் போகத் தெரியும் – 5

போகப் போகத் தெரியும் – 4

யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்ற பழக்கத்தை சாதி அடிப்படையில் வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை. அதை எல்லாத் தளஙகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியதுதான். அதற்கான சாம, தான, பேத, தண்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்பவர் அந்த நேரத்தில் விலகி இருக்கிறார். இதற்கும் தீண்டாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பூஜை செய்பவர் இன்ன சாதியாரைத் தொடுவேன் இன்ன சாதியரைத் தொடமாட்டேன் என்று வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை…

View More போகப் போகத் தெரியும் – 4