பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்Tag: பெரியார்
ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்
தலித்துகளை மையப்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு பாஜக அரசாங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலிருந்து – இந்துமதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி நிகழ்ச்சி நடத்தப்படுவதிலிருந்து இந்த அமைப்பின் நோக்கமும், இந்த அமைப்பினை பின்னால் இருந்து இயக்குகின்ற அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
View More ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்பாரதி: மரபும் திரிபும் – 8
மதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள், “…அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி” என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள்… 1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர்… ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்… அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்… வார்த்தைக்கு வார்த்தை, கம்பன், குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான்…
View More பாரதி: மரபும் திரிபும் – 8திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை… வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது.. கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?…
View More திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு
தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல்… வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது… வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க.. அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியதுதான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்?… இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு… அவன் வட்டாரத்தில் பாரதியாரை ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு… எல்லாப் புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.
View More வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவுநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்
ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது
View More திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்விஜயகாந்த் சொன்னது சரிதானா?
‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’ என்று பழத்தில் ஊசியை பக்குவமாக ஏற்றினாரே அண்ணாதுரை அது எதற்காக?
View More விஜயகாந்த் சொன்னது சரிதானா?போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி
”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.
-பக்.283/திராவிட இயக்க வரலாறு”
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!