அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள்… கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி….
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)