எந்த ஒரு தேர்தலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு அனுதாப அலையும் வீசாத பட்சத்தில் ஆட்சி மாற்றமே பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த வழக்கமான நடைமுறை இம்முறை மாறுகிறது. இந்தத் தேர்தல்- செயலற்ற, சுயநல வடிவான, ஊழல் மலிந்த ஐ.மு.கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பும் ஒரு செயல்வீரரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வானது, நாடு முழுவதுமே ஒரு உந்துசக்தியைப் பாய்ச்சி இருக்கிறது…. “செப்டம்பர்-26 அன்று திருச்சி வருகை தரும் மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்கலாம்”… இந்த 4 கட்சிகளும், இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்படும் நிலை உருவாகும். இந்திய ஜனநாயகக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கமும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு துணையாக நிற்கும்…
View More தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2Tag: மதிமுக
திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை… வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது.. கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?…
View More திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை
கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்.
View More தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதைதேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி
திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையிலான ஊடலும் கூடலும் தேர்தல் காலத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, சுயமரியாதைச் சுடரொளியாம் கருணாநிதி நடத்திய அபத்த நாடகம் ஆளும் கூட்டணியின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தியது… ஒரே நாளில், கருணாநிதிக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு எதிரானதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை ஜெயலலிதா தவிர வேறு யாருக்கேனும் வாய்க்குமா என்பது சந்தேகமே… அல்லது, மக்கள் வெற்றி- தோல்வி பற்றிய எந்தக் கவலையும் இன்றிக் களம் காணும் பாஜகவை சிறிது திரும்பிப் பார்க்கலாம்…
View More தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி