முதன்முதலில் நமது இளைஞர்கள் பலம் உடையவர்கள் ஆக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலம் உள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.
View More எழுமின் விழிமின் – 17Tag: மனித குல முன்னேற்றம்
எழுமின் விழிமின் – 16
பாரதத்தின் ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முஸ்லீம்களாகி விட்டார்கள். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் ஜனத் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. யாருடைய குற்றம் இது?… நம் தேசிய வாழ்க்கையாகிற உடல் பலவீனப்படும் பொழுது தான் பலவித நோய்க் கிருமிகளான கருத்துகள் நமது மக்களினத்தின் அரசியல் துறையில், சமூகத் துறையில், அறிவுத் துறையில் பெருங்கூட்டமாக நுழைந்து நோயை உண்டாக்குகின்றன… நமது சமயம் சமையலறை மதமாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது… குறைபாடுகளை எவ்வளவு விரைவில் ஒழிக்கிறோமோ அவ்வளவுக்கு நமது கொள்கைகள் அதிகமான பிரகாசத்துடன் ஜொலிக்கும்…
View More எழுமின் விழிமின் – 16எழுமின் விழிமின் – 10
ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் ஏற்கனவே மேல் நிலையிலிருப்பவர்களைத் தாழ்த்துவது அல்ல; அன்றி அளவின்றி உண்டு, குடிப்பதன் மூலம் மூளை தடுமாறி ஓடுவதல்ல. வரம்பு மீறிப் போகங்களை அனுபவிப்பதற்காக முன்னோர் வகுத்த எல்லையைத் தாண்டிச் செல்லுவதுமல்ல… மனித குலம் முழுவதையும் மெல்ல மெதுவாக உயர்த்தி, எதையும் எதிர்க்காத, அமைதியான, உறுதியான, வழிபாட்டுத் தன்மையுள்ள தூய தியான வடிவான ஆன்மிக மனிதனாக ஆகும் லட்சிய நிலைக்கு ஏற்றி வைக்க வேண்டும். அந்த லட்சியத்திலேயே தெய்வமுள்ளது… உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும்.
View More எழுமின் விழிமின் – 10எழுமின் விழிமின் – 9
கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதுகிற மனிதனோ, சமூகமோ மரணத்தின் வாய்க்குள் முன்னரே புகுந்துவிட்டதாக அறிந்துகொள்ளுங்கள். ஆம்! மேல்நாட்டவரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உள்ளன. ஆனால் அஞ்ச வேண்டுவனவும் உள்ளன… ஒரு கதையில் ஒருவன் தனது நண்பனின் நெற்றியில் உட்கார்ந்திருந்த கொசுவைக் கொல்லவிரும்பிக் கொடுத்த பலமான அடியில் கொசுவுடன் நண்பனும் இறக்கத்தக்க நிலை ஏற்பட்டதாம். அதுபோலத்தான் இவர்கள் நிலையும்…. நமது பண்டைய சட்ட நிர்மாணகர்கள், ஜாதிகளை உடைப்பவர்களாகவும் இருந்தனர். ஆயினும் அவர்கள் நமது தற்காலச் சீர்திருத்தக்காரர்களைப்போல இருக்கவில்லை…
View More எழுமின் விழிமின் – 9