இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன… அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன… இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 02Tag: மன்மோகன் சிங்
நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01
இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]
[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)] சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தார்கள், இடதுசாரிகளும் ஆதரித்தார்கள். இதை பாரதிய ஜனதாவும், சிவசேனையும் கடுமையாக விமர்சித்தன. முஸ்லிம் கல்வி நிறுவனம், உதாரணமாக ஜார்க்கண்டில் உள்ள ஜும்ரீத் அலியா என்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனம் எந்த மத்திய பல்கலைக்கழகத்துடனும் தனது விருப்பம் போல தன்னை இணைத்துக் கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதும் சுலபமாகும். வெளியிடங்களிலும் இதைக் காட்டி உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹிந்து மாணவரால் அப்படி…
View More காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1
[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)]. உங்கள் பார்வைக்கு 7 முக்கிய புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஹிந்து வாக்காளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற அவர்கள் அக்கறையின்றி வாக்களித்து வரும் முறைதான் காரணம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக நன்கு படித்த ஹிந்துக்களின் பார்வைக்கு இந்தப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஆனால் இதைப்பற்றி நன்கு படித்த ஹிந்துக்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஊடகமும் ஹிந்துக்களின் நலனில் உண்மையான அக்கறையற்ற அரசியல்வாதிகளும் காரணம் என்று சொல்வதைவிட…
View More காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1