காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1

மூலம்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)
தமிழில்: விடவி விரும்பி

congress-snatching-hindu-rights

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியான ’ஹிஸ்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளின் பயனாக மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினரின் விகிதம் அதிகரித்துள்ளது என்பதே அந்தச் செய்தியாகும். 2006-07 காலகட்டத்தில் மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் 6.9 சதவீதமாக இருந்தது. 2007-08 ல் 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிதித்துறையில் அதாவது வர்த்தக வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி போன்றவற்றில் சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் 2006-07ல் 7.6 சதவீதமாக இருந்தது. 2007-08ல் 8.9 சதவீதமாக அதிகரித்தது. ரயில்வே துறையில் 2006-07ல் 2.7சதவீதமாக இருந்த சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் 2007-08 ல் 6.3 சதவீதமாக அதிகரித்தது. இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசு பணிகளில் உள்ள ஹிந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்தது.

உங்கள் பார்வைக்கு 7 முக்கிய புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஹிந்து வாக்காளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற அவர்கள் அக்கறையின்றி வாக்களித்து வரும் முறைதான் காரணம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக நன்கு படித்த ஹிந்துக்களின் பார்வைக்கு இந்தப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஆனால் இதைப்பற்றி நன்கு படித்த ஹிந்துக்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஊடகமும் ஹிந்துக்களின் நலனில் உண்மையான அக்கறையற்ற அரசியல்வாதிகளும் காரணம் என்று சொல்வதைவிட ஹிந்து வாக்காளர்களின் அசிரத்தை தான் முக்கிய காரணம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். ஹிந்து வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருந்துவிடுகிறார்கள் அல்லது காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா பரிவார் கட்சிகள் போன்றவற்றுக்கு வாக்களித்து விடுகிறார்கள்.

1. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியவர்களுக்கு இழைக்கும் அநீதியைப் பற்றி பார்ப்போம்.

muslims_reservations2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஹிந்து அதிகாரிகள் மற்றும் ஹிந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை 15 சதவீதம் குறைக்க வேண்டும். என்பதுதான் அதன் பரிந்துரையில் இடம் பெற்றுள்ள சாராம்சமாகும். கல்லூரிகளில் கூட ஹிந்து மாணவர்களுக்கு 15 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என்பதாக அது பரிந்துரைத்துள்ளது. இது ஹிந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பாதகமான அம்சமாகும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி வாய்ப்பில் உயர வழிவகுப்பது என்ற பெயரில் ஹிந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பத்தி 16.2.16ன் படி எல்லா சிறுபான்மையினரும், குறிப்பாக முஸ்லிம்கள் குறைவான அளவிலேயே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். அவர்களது ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வேலை வாய்ப்பில் அவர்கள் பின்தங்கியுள்ளனர். எனவே அவர்களைப் பிற்பட்ட வகுப்பினராகக் கருதவேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 16(4) ன் படி சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்தான் பிற்பட்டவர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் மதரீதியான கண்ணோட்டத்துடன் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு இடம் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திரா சஹானி வழக்கில் 16(4)ன் படி பொருளாதார அளவுகோலை பிற்பட்ட தன்மைக்கு அளவுகோலாகக் கருதக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பிற்போக்கு நிலை அவர்களது சமூக மற்றும் கல்வி சார்ந்த பிற்போக்கு நிலையாகும். எனவே பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏற்கத்தக்கது அல்ல. 16(1)ன் படி கல்வி மற்றும் சமூக நிலையில் பின்தங்கியிருந்தால் தான் பின்தங்கியிருத்தல் என்பதை முடிவு செய்யமுடியும்.

இதன்படி பார்த்தால் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை முற்றிலும் சட்ட விரோதமானது. இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதை உதாசீனப்படுத்திவிட்டு சிறுபான்மையினருக்கு பொருளாதார அளவுகோலை மையமாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளது அரசியல் சாசனத்திற்கு புறம்பானதாகும். மத்திய அரசு அல்லது மாநில அரசில் பணிபுரியும் ஹிந்து அதிகாரிகள் மதசிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த 15 சதவீதத்தில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கானது. 5 சதவீதம் இதர சிறுபான்மையினருக்கானது.

இந்தக் கமிஷன் பரிந்துரைப்படி பார்த்தால் அது என்றைய தினம் அமலுக்கு வருகிறதோ அன்றிலிருந்து இந்திய அரசின் செயலாளர், கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பணியிடங்களில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நிலை ஏற்படுவதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஹிந்து அதிகாரிகள்தான். அவர்கள் பணி உயர்வு பெற இது முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அவர்களைவிட இளநிலையில் இருக்கும் சிறுபான்மை அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். இது இந்தியா முழுவதும் நடைபெறும். மத்தியிலும் நடைபெறும். மாநிலங்களிலும் நடைபெறும். எல்லா துறைகளிலும் நடைபெறும்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், டி.எஸ்.பி. கள் பொறியாளர்கள், உதவி கலெக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் இதனால் பாதிப்புக்கு இலக்காவார்கள். எனவே ஹிந்து அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன் செயல்படவேண்டும். அரசுப் பணிகளில் சேர ஆர்வமுடைய ஹிந்துக்களும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். போலி மதச்சார்பின்மை என்ற உறக்கக் கலக்கத்திலிருந்து அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கண்களை அகல விரித்துப் பார்க்கவேண்டும். கம்யூனிஸ்டுகள் மற்றும் முலாயம்சிங் யாதவ், மாயாவதி, கருணாநிதி, சரத்பவார், சந்திரபாபு நாயுடு போன்றோர் நடத்தும் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அரங்கேற்றவிருக்கும் அநீதியை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது ஹிந்துக்களின் வேலை வாய்ப்பை நிரந்தரமாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வது முடியாமல் போய்விடும்.

அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது என்று மிஸ்ரா கமிஷன் கூறியுள்ளது உண்மைக்குப் புறம்பானதாகும். முஸ்லிம்கள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ். உயர் பதவிகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 4 சதவீதம்தான் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். எனவேதான் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். 13 சதவீத முஸ்லிம்களுக்கு 4 சதவீத அதிகாரிகள் என்ற கணக்கு முழுமையானதல்ல. முதல் நிலை அதிகாரிகளாக வரவேண்டுமானால் அவர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். முஸ்லிம்களில் பட்டதாரிகள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதை வேறு எங்கும் தேடி பார்க்கத் தேவையில்லை. அது மிஸ்ரா கமிஷன் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 3.6 சதவீதத்தினர் மட்டுமே பட்டதாரிகள் என்பதுதான் அந்தப் புள்ளிவிவரம் ஆகும்.

எனவே 3.6 சதவீதம் என்ற அளவில்தான் முஸ்லிம் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 சதவீதம் என்பதில் எந்தக் குறைபாடும் தென்படவில்லை. அது நியாமானதாகத்தான் தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் அது சற்று அதிகம்தான். மேலும், முஸ்லிம்கள் 4 சதவீதம் உயர் பணிகளில் இருக்கிறார்கள் என்பதுடன் முஸ்லிம்களுக்குக்கென பிரத்தியேகமாக 10 சதவீத பணியிடங்களையும் வேலைவாய்ப்புகளையும் ஒதுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது. இதன்படி பார்த்தால் ஹிந்து அதிகாரிகளைவிட முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வெகு வேகமாகக் கிடைக்கும். குறுகியகாலத்திலேயே முஸ்லிம் அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் ஹிந்து அதிகாரிகளால் அவ்வாறு வர முடியாது.

ராஜீவ் மந்திரி சபையில் அமைச்சராக இருந்த ஆரிப் முகமதுகான் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 10 முஸ்லிம் சமூகங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 83 முஸ்லிம் சமூகங்கள் இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் மொத்த முஸ்லிம்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதில் இடம் பெற்றுள்ளனர். உச்ச நிலையில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் மட்டும்தான் இதில் இடம்பெறவில்லை. இதேபோல கிறிஸ்தவ சமூகங்களிலும் பழங்குடியினர் பட்டியல் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அரசியல் சாசனமும் உச்ச நீதிமன்றமும் சமூக மற்றும் கல்வி ரீதியான பிற்பட்ட தன்மை இருந்தால்தான் அரசியல் சாசனப் பிரிவு 16(4)ன் படி இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெறமுடியும் என்பதை உறுதிபட தெரிவித்துள்ளன. உண்மையில் முஸ்லிம் சமூகத்தினர் 11 மாநிலங்களில் ஹிந்துக்களைவிட கல்வி நிலையில் மேலானவர்களாக உள்ளனர். தேசிய அளவில் எடுத்துக்கொண்டால்கூட ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரைவிட முஸ்லிம்கள் கல்வி நிலையில் மேலான நிலையில்தான் உள்ளனர். மிஸ்ரா கமிஷன் அறிக்கை, பத்தி 12.3ன் படி கல்வி அறிவு பற்றிய புள்ளிவிவரத்தை அலசி ஆராய்ந்த போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளோரைவிட முஸ்லிம்கள் மேலான நிலையில்தான் உள்ளனர் என்பது உறுதியாகிறது.

2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சச்சார் கமிட்டி மற்றும் மிஸ்ரா கமிஷன் (அட்டவணை 3.5, பத்திகள் 12.3, 18.5 மற்றும் பல) அறிக்கையில் குறிப்பிட்டபடி மற்ற மத சிறுபான்மையினரைவிட இன்னும் சொல்லப்போனால் தேசிய சராசரி அளவான 65 சதவீதம் என்பதைவிட கிறிஸ்தவர்கள் கல்வி அறிவில் மேம்பட்ட நிலையில்தான் உள்ளனர். எனவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் பின்தங்கிய நிலையை காரணமாகக் காட்டும் தகுதி உடையவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை.

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஹிந்து ஆண்களைவிட முஸ்லிம் ஆண்கள் கல்வி அறிவில் முதன்மை பெற்றுள்ளனர். ஆந்திரா அந்தமான் நிக்கோபார், சத்திஸ்கர், குஜராத், கேரளா, கர்னாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவையே அவை.

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஹிந்துப் பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் முதன்மை பெற்றுள்ளனர். ஆந்திரா, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், டாமண்டையு, தத்ரா, நகர்கவேலி, குஜராத், ஜார்க்கண்ட், கர்னாடகா, மத்திய பிரதேசம், மகாரஷ்டிரா, ஒரிசா, புதுச்சேரி தமிழ்நாடு ஆகியவையே அவை. (2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜனத்தொகை அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் ஆகும்.)

சச்சார் கமிட்டி (பக்கம் 53), 10 மாநிலங்களில் உயர் வகுப்பைச் சேர்ந்த ஹிந்துக்களை விடவும் முஸ்லிம்களின் கல்வி அறிவு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்புகளைவிட முஸ்லிம்களின் நிலைமேலானது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.

மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையினால் ஹிந்துக்கள் எவ்வாறெல்லாம் வேலை இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சற்று கவனிப்போம். 2009 வரை உள்ள நிலவரத்தைப் பார்ப்போம், அரசுப் பணியில் 10 ஆயிரம் இடம் இருந்தால் அதில் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு 1500 இடங்கள் கிடைக்கும். இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கு 2,700 இடங்கள் கிடைக்கும். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கு 750 இடங்கள் கிடைக்கும்.

justice-ranganath-mishra1இப்போது ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நாட்டில் உள்ள வளங்களில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை என்பதாக பகிரங்கமாக அறிவித்தார். எனவே சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுக்க இந்த அரசுக்குத் தயக்கமே இல்லை. மற்றவர்களுக்கெல்லாம் ஒதுக்கப்பட்டதற்கு பிறகு எஞ்சியுள்ள இடங்கள்தான் ஹிந்துக்களுக்கு கிடைக்கும். எஞ்சிய 8,500 இடங்களில் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் 15 சதவீத இடங்களைப் பெறுவார்கள். இதில் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் என்ற அடிப்படையில் 1,275 இடங்களை அவர்கள் பெறுவார்கள். இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் (இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஓரளவுக்கு உள்ளனர்) 27 சதவீத இடங்களைப் பெறுவார்கள். அதாவது 8,500 இடங்களில் 27 சதவீதம் என்று கணக்கிட்டால் 2,295 இடங்களை அவர்கள் பெறுவார்கள்.

பழங்குடி ஹிந்துக்கள் (இதிலும் ஓரளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர்) 8,500 ல் 7.5% இடங்களை பெறுவார்கள். 637 இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.

2009 வரை உயர் வகுப்பு ஹிந்துக்களுக்கு 5,000 திற்கும் சற்று அதிகமாக கிடைக்கும். ஆனால் மன்மோகன் சிங் அரசு சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதை அடுத்து பொதுப்போட்டிக்கான இடங்களில் எண்ணிக்கை 5000 த்தைவிட சுருக்கிவிடுகிறது. 4,310 இடங்களுக்காக மட்டுமே போட்டி நடைபெறும். ஹிந்துக்கள் எல்லா நிலைகளிலும் பாதிப்புக்கு இலக்காகிறார்கள் என்பதை வேதனையிலும் வேதனை என்று சொல்வதா அல்லது இதை அதிசயத்திலும் அதிசயம் என்று கூறுவதா என்றே தெரியவில்லை.

கல்வி ரீதியாக, வேலைவாய்ப்பு ரீதியாக, பொருளாதார ரீதியாக அவர்கள் கடும் பாதிப்புக்கு இலக்காகின்றனர். ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் இதர கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் ஹிந்துக்களை நசுக்குவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

மிஸ்ரா கமிஷன் அறிக்கை பத்தி 16.27ல் கூறப்பட்டுள்ளதாவது: நீதிமன்ற முடிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர் கணிசமாக சேர்த்துக் கொள்ளப்படுவது தேசிய ஒற்றுமைக்கு உகந்ததாகும். சிறுபான்மையினர் 50 சதவித அளவுக்கு சேர்த்துக் கொள்ளப்படலாம். எஞ்சிய 50 சதவீதம் பெரும்பான்மையினருக்கு ஒதுக்கப்படலாம். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை நாங்கள் உறுதியாகக் குறிப்பிட விரும்புகிறோம். சிறுபான்மையினர் அல்லாதோர் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 15 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும்.

அ) சிறுபான்மையினர் இடையிலான உள்பகுப்பு வருமாறு: 10 சதவீத இடங்கள் முஸ்லிம்களுக்கானவை. ஏனெனில் மொத்த சிறுபான்மையினரில் 73 சதவீதத்தினர் முஸ்லிம்கள். எஞ்சிய 5 சதவீத இடங்களை முஸ்லிம் அல்லத மற்ற சிறுபான்மையினருக்கு வழங்கவேண்டும்.

ஆ) 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சில குறிப்பிட்ட மாற்றங்களை சூழ்நிலைக்கு ஏற்ப செய்துகொள்ளலாம். முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடங்களை முஸ்லிம்களைக் கொண்டு நிரப்பமுடியவில்லை எனில் அந்த இடங்களை இதர மதச் சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். ஆனால் இந்த 15 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களில் எதையும் பெரும்பான்மைப் பிரிவினருக்கு அளிக்கவே கூடாது.

இ) இந்த 15 சதவீத ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை சேர்க்கக் கூடாது.

இந்தப் பரிந்துரைகளை அமலாக்க முற்பட்டால் மத சிறுபான்மையினரைவிட அதிக மதிப்பெண்கள் பெற்ற ஹிந்து மாணவர்களால் கூட சிறுபான்மையினர் அல்லாதோரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில், வெளிப்படையாகச் சொல்லப் போனால் வித்யா பாரதி போன்ற ஹிந்து அமைப்புகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், டி.ஏ.வி கல்லூரிகள் போன்றவற்றில் இடம்பெற இயலாமல் போய்விடும். இப்போது 10 ஆயிரம் பொறியியல் கல்லூரி இடங்களில் அதாவது, பெரும்பான்மை சமூகத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால் இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்து மாணவர்கள் 2,700 இடங்களைப் பெறுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் 1,500 இடங்களைப் பெறுகிறார்கள். பழங்குடியினர் 750 இடங்களைப் பெறுகிறார்கள்.

ஆனால் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அமலாக்கப்பட்டால் முதலிலேயெ 1,500 இடங்கள் மத சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டு விடும். எஞ்சியுள்ள 8,500 இடங்கள்தான் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 8,500ல் 27 சதவீத இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதே போல வரிசைக் கிரமமாக தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படும். முந்தி இருந்த நிலையைவிட எல்லா பிரிவுகளைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கும் குறைவான ஒதுக்கீடே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் ஹிந்துக்கள் என்.எஸ்.யூ.ஐ. எனப்படும் இந்திய தேசிய மாணவர் பேரவை எனப்படும் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவார்கள்.

2. அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் கூட ஹிந்து மாணவர்களுக்கு மழலைப் பள்ளிகள், பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இடம் கிடைப்பது அரிதாகிவிடும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. ஹிந்துக்களிடம் பெறப்பட்ட வரிப்பணத்தைக் கொண்டுதான் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் இத்தகைய உதவி பெறாமலும் இயங்குகின்றன.

edu039293புனித ஸ்டீபன் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது. அது கிறிஸ்தவர்களால் நடத்தப்படுகிறது. அங்கு கிறிஸ்தவர்களுக்கு கட் ஆப் மார்க் மற்றொரு வகையாகவும் உள்ளது. கிறிஸ்தவர்களின் நலனுக்கு உகந்ததாக இவ்வாறு செய்யப்படுகிறது. இதேபோல சீக்கிய அமைப்பால் நடத்தப்படும். கல்சா கல்லூரியில் சீக்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதேபோல ஜாமியா ஹிம்டார்டு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த எல்லா கல்லூரிகளிலும் ஹிந்து மாணவர்கள்தான் பாதிப்புக்கு இலக்காகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைதான் ஏற்படும்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஹிந்து ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் எவ்வளவுதான் தகுதி இருந்தாலும் ஹிந்துக்கள் முதல்வர்களாக வருவது அதிசயம்தான். புனித ஸ்டீபன் கல்லூரியில் முதல்வராகவோ ஹிந்து வரமுடியாது என்று விதிமுறையே உள்ளது. இவ்வளவுக்கும் இந்தக் கல்லூரிக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்திலிருந்து மத்திய அரசு கோடிக்கணக்கான பணத்தை ஆண்டுதோறும் கொட்டிக்கொடுக்கிறது. ஹிந்துக்கள் எவ்வளவு தகுதி படைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இப்படிப் பட்ட நிறுவனங்களில் கொடுக்கப்படுவதில்லை. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் ஹிந்துக்கள் அல்லாதோரே.

(தொடரும்….)

காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]

நன்றி: விஜயபாரதம் 26-02-2010 இதழ்

21 Replies to “காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1”

  1. மக்கள் இனிமேலும் விழிக்கவில்லை என்றால் ஓட்டுப்பொறுக்கிகள் இந்துக்களுக்கு மண்ணின் மைந்தர்களுக்கு நாமம் போடப்போவது உறுதி. மக்கள் விழித்து தங்களது ஓட்டுரிமையை தவறாது பயன் படுத்த வேண்டும். ஏனென்றால் பிற மதத்தினருக்கு எல்லா சலுகையையும் அளித்து மண்ணின் மைந்தர்களை உரிமைக்காக போராட வைத்து விடுவார்கள். இப்போதே பிற மதத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகளை பாருங்கள் – வீட்டிற்கு வீடு நிறைய பிள்ளைகளை பெற்று விடுகிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து இந்த ஓட்டுப்பொறுக்கிகள் நமது வரிப்பணத்தில் படிப்பு முதல் வேலை வாய்ப்பு வரை பெற்றுதருகிறார்கள். நாம் இப்படியே இருந்தால் நாமம் உறுதி.

  2. ஓ.பி. குப்தா மீண்டும் மீண்டும் சொல்கிறார் – முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது ஹிந்துக்களின் வாய்ப்புகளை குறைக்கும், ஜூனியர் முஸ்லிம் அதிகாரிகள் சீனியர் ஹிந்து அதிகாரிகளை தாண்டி பதவி உயர்வு பெறுவார்கள், முஸ்லிம்களில் 3+ சதவிகிதம் பேரே பட்டதாரிகளாக இருக்கும்போது அவர்கள் குறைந்த அளவில் பதவி வகிப்பது புரிந்து கொள்ளக் கூடியதே என்று. இவை அனைத்தும் பிற்படுத்தப்பட்ட தாழத்தப்பட ஜாதிகளுக்குக்கான இட ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும். தலித்களுக்கான இட ஒதுக்கீடு “உயர் ஜாதி” ஹிந்துக்களின் வாய்ப்புகளை குறைக்கத்தான் செய்யும். ஜூனியர் தலித் அதிகாரிகள் பதவி உயர்வு பெறத்தான் செய்வார்கள். தலித்களில் படித்தவர் சதவிகிதம் ஜாதி ஹிந்துக்களை விடக் குறைவே.

    ஓ.பி. குப்தா இட ஒதுக்கீடு என்ற கருத்தையே எதிர்க்கிறாரா இல்லை மதத்தின் பேரால் இட ஒதுக்கீடு என்பதை மட்டும் எதிர்க்கிறாரா? பின்னது என்றால் தலித்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு “உயர் ஜாதியினரை” பாதிப்பது பற்றி என்ன சொல்கிறார்? முன்னது என்றால் பதவிகளில் இன்னும் “உயர் ஜாதியினரும்” ஹிந்துக்களும் அதிகமான பதவிகளை வகிப்பது பற்றி அவர் கருத்து என்ன? இது சரி என்று நினைக்கிறாரா? இந்த நிலை மாற்றப்பட வேண்டியது என்றால் இட ஒதுக்கீட்டைத் தவிர்த்த அவரது தீர்வு என்ன? மேலும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை இவர் எதிர்க்கிறாரா? தமிழ் ஹிந்து தளத்தில் எழுதுபவர்கள், வாசகர்கள் யாராவது தெளிவுபடுத்த முடியுமா?

    இந்த கேள்விகளுக்கு தமிழ் ஹிந்து தளத்தவர் என்ன நினைக்கிறீர்கள்?

    (edited and published)

  3. upto me i strongly oppose quota system. podhuva en intha quota system. idhanaala innum enna paiyan? munnerugira oru sila makkalai innoru munnerugira makkal adichi saptruvangala, illa munnera vidaama saavadipaangala. illa oru makkaloda majority korainumne seiapaduvathaa? en ivargal merit or grade system apdinnu munera ninaipathu illai?

    (edited and published)

  4. ஓ.பி குப்தா என்ன நினைக்கிறார் என்பது கிடக்கட்டும்.

    இந்தியாவின் அரசியல் சாசனத்திலேயே மதச்சார்பற்ற நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் அரசு ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும் ?
    அதைப்பற்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும் ஆர்.வி. அவர்களே.

  5. அய்யா!
    நம் நாட்டுக்காகவும் நம் நாட்டு விடுதலைக்காகவும் உயிர்த் தியாகம் பொருள் தியாகம் கணக்கில்லாமல் செய்துள்ளவர்களில் சில முஸ்லீம்களும் உண்டு.
    இப்போது கூட அந்நிய செலாவணி உள்பட நாட்டின் அணுகுண்டு உற்பத்தி வரை முஸ்லிம்களின் கள்ளமில்லா தியாகம் அளப்பெரியது.
    அவர்களிடம் இருந்து பெறுவதை அசிங்கமாக நினைக்காத நாம், அவர்களுக்கு ஒன்றுமே கொடுக்கக்கூடாது என பிரச்சாரம் செய்வதால் நமக்கு தான் அசிங்கம்.
    அவர்களின் விகிதாச்சார அடிப்படையில் அவர்களின் பங்குகளை வழங்குவது தான் உண்மை தர்மம் ஆகும்.
    அவ்வாறின்றி பொறாமைப்பட்டு மனிதர்களில் உள்ள பலரை ஒழித்துவிட்டு நாம் மட்டும் அதிகார நாற்காலிகளில் அமர சூது செய்தால் காலம் நம்மை கேவலப்படுத்தும்.
    அதோடு நம் அழிவுக்கு நாமே நல்ல காரணியாக ஆகிவிடுவோம்.

    (edit and published)

  6. துர்க்கா அவர்களே

    கல்வி மற்றும் பதவி தகுதியினால் வரவேண்டுமே தவிர அவன் பிறந்த இடத்தினால் வழங்க பட கூடாது.

    Muslims and Christians are already getting the benefit under OBC & MBC category. Why the hell central government wants to provide a separate reservation for so called minority people. This is the final warning to Hindus. If we don’t take any action, our next generation will become like a slave. think about the condition of hindus in pakistan and bangaladesh. if the so called minority become majority, each and every state of india will become like a kashmir, hindus will be treated as a third rate citizen, Hindus, please wake up…. this is the final wake up call for you

  7. ஆர் வி

    குப்தா சொல்ல வருவது இதுதான்:

    1. ஏற்கனவே 70 சதவிகித முஸ்லீம்களுக்கு இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே பிற்பட்டவராகவோ அல்லது எஸ் ஸி எஸ் டி ஆகவோ கருதப் பட்டு சலுகை ஏற்கனவே வழங்கப் பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் 90 சதவிகித முஸ்லீம்கள் பிற்பட்ட வகுப்பில் வருபவர்களே.

    2. ஏற்கனவே முஸ்லீம்கள் ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே சலுகைகள் அனுபவித்து வரும் பொழுது புதிதாக மத அடிப்படையில் அவர்களைப் பிரித்து அவர்களுக்கு என்று தனியே இன்னும் ஒரு பத்து இருபது சதிவிகிதம் என்று வழங்க முற்படுவது அயோக்கியத்தனம், சுத்தமான ஓட்டுப் பொறுக்கித்தனம் இதனால் பாதிக்கப் படப் போவது இளிச்சவாய்த்தனமாக காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டு இருக்கும் நம் மதச்சார்பின்மை என்பதே என்னவென்று புரியாமல் தெரியாமல் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் இந்துக்களே.

    3. ஏற்கனவே ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டு சமூக அநீதி இந்தியாவில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத அடிப்படையிலும் அவர்களுக்கு வழங்கப் பட்டால் அது அனைத்து இந்துக்களையுமே பாதிக்கும் என்பது குப்தாவின் வாதம்.

    சரி. குப்தா சொல்வது இருக்கட்டும். நான் சொல்ல வருவது :

    இட ஒதுக்கீடு என்பது ஜாதியின் அடிப்படையில் இல்லாமல் உண்மையிலேயே சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் ஜாதி, மதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாமல் அவர்கள் எத்தனை தலைமுறையாக கல்வி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களது வருட வருமானம் என்ன என்பனவற்றின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள இட ஒதுக்கீட்டு முறை ஒரு மாபெரும் சமூக மோசடியாகும். இதில் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுச் சலுகையில் முன்னேறியவனே மீண்டும் மீண்டும் முன்னேறுகிறான் மேலும் வறுமையில் வாடும் ஏழை முற்படுத்தப் பட்டவர்கள் இந்த சமூக அநீதி திட்டத்தினால் மேலும் நசுக்கப் பட்டு அழிக்கப் படுகிறார்கள். இப்படிப் பட்ட ஒரு சூழலில் இன்னும் ஒரு 20 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு என்று தனியாக ஒதுக்கி அளிக்கப் பட்டால் அது இந்திய அளவில் மாபெரும் மதக் கலவரத்தையே தோற்றுவிக்கும். இந்தியாவின் அழிவிற்கு வழி கோலும். மத அடிப்படையில் எந்தவித சலுகைகளும் வழங்கப் படக் கூடாது. ஏற்கனவே இருக்கும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுச் சலுகையும் ஒழிக்கப் பட்டு வறுமை, பரம்பரை பரம்பரையாகக் கல்வி இன்மை ஆகிய அடிப்படையில் மட்டுமே எந்தவொரு இட ஒதுக்கீட்டுத் திட்டமும் வழங்கப் பட வேண்டும். நான் ஜாதி அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீட்டையும், ஓட்டுப் பொறுக்கிக் காங்கிரஸ் களவாணிகள் கொண்டு வரும் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டு அயோக்யத்தனத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

    இந்த காங்கிரஸ் அரசு ஏற்கனவே தீவீரவாதிகளுடன் துணை சேர்ந்து இந்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இப்பொழுது அவர்களது கல்வி வேலைகளிலும் கை வைக்கத் துணிகிறது. இது எதுவுமே புரியாமல் இந்துக்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கட்சிகளுக்கே ஓட்டளித்து வருகிறார்கள். குப்தா இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறாரா என்பது தெரியாவிட்டாலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிச்சயம் எதிர்க்கிறார். நான் இரண்டையும் எதிர்க்கிறேன். இந்திய ஒற்றுமையில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த அநியாயத்தை எதிர்க்க வேண்டியது கடமை. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழ் இந்துவின் கடமை.

    அன்புடன்
    ச.திருமலை

  8. அண்ணன்
    srikumar
    அவர்களுக்கு;
    இப்போது முஸ்லிம்கள் இருக்கும் நிலையில் தற்ச்செயலாக நாம் இருந்து,
    பின்பு நமக்கு எந்த வாய்ப்பும் தகுதி இல்லை என்றபொய்க்காரணம் மட்டும் காட்டி தரப்படவில்லை எனில்,
    நாம் என்ன செய்வோம்?
    கோபப்படுவோம் ,சண்டைசெய்வோம், முடிந்தால் கிளர்ச்சிகூட செய்வோம்,
    இல்லையா?
    பங்காளி பாகிஸ்தானி எல்லாம் இந்துக்களாக இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்கள் என்பது மட்டும் உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது.
    என் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் கேரளத்துஅய்யர் (நம்பூதரி) முஸ்லிமாக மாறி குல்லா போட்டுட்டுக்கொண்டு சுத்துகிறார்.
    கேரளத்து கமலாதாஸ் முதல் ar ரஹ்மான் வரை உயர் ஹிந்த்க்களின் பட்டியலே நீளும் பொது.
    பொய்க்காரணங்களை தேடுவதை விட்டு சத்தியத்தையும் உண்மையும் சொன்னால், இந்துக்களுக்கும் உலகில் ஒரு நல்ல இடம் கிடைக்கும். மேலும் நீங்கள் சொல்வது போல, முஸ்லிம்கள் கொலை செய்பவர்களாக இருந்திருந்தால் ,
    அவர்கள் ஆட்சி செய்த 500.ஆண்டுகளுக்குள் ஒரு இந்துகூட உயிருடன் வாழ்ந்திருக்க முடியாது , ஏன் பொய்பழி சுமத்துகிறீர்கள்.
    வீண்பயம் நமக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்ப்படுத்தும்.
    கொஞ்சம் அகல விரிந்து வெளியே தாரளமாக வாருங்கள்
    மிகப்பெரிய அன்பின் காட்சியை பார்க்க முடியும்.

  9. 90.பெரிதா?
    10.பெரியதா?
    முன்னேற விடாமல் சகல வழிகளிலும் ஹிந்துக்கள் சதி செய்கிறார்கள் என்பதனால் தான் முஸ்லிம் உள்பட இதர சிறு பான்மையினர் களுக்கு
    இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
    100.சதவீதமும் அவர்களுக்காக கொடுக்கவேண்டும் என யாராவது சொல்லி இருந்தால் அது எதிர்க்கவேண்டிய ஒன்று .
    நாம் உண்ணும் உணவில் ஒரு கவள உணவாவது அவர்களும் உண்னட்டுமே;

  10. வஜ்ரா, இது ஓ.பி. குப்தாவின் கட்டுரை. இங்கே அவர் எழுதியதைப் பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். ஓ.பி. குப்தாவின் வாதங்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. அவர் இட ஒதுக்கீட்டை மொத்தமாக எதிர்க்கிறார் என்றால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும், அது இந்த தளத்தில் பொதுவாக தெரியும் இட ஒதுக்கீடு ஆதரவுக்கு எதிரானது, அப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த தளத்தினருக்கு ஏற்புடையதுதானா என்று தமிழ் ஹிந்து தளத்தினர் வெளிப்படையாக சொல்ல வேண்டும். மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை மட்டும் எதிர்க்கிறார் என்றால் இந்த கட்டுரையில் இருக்கும் பாதிக்கும் மேலான வாதங்கள் பயனற்றவை.

    ஆனால் வளவள என்று இழுக்க இஷ்டம் இல்லாததால் சொல்கிறேன் – நான் மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன். எந்த மதத்தினரும் இட ஒதுக்கீடு தர வேண்டிய அளவுக்கு பிற்பட்டு இல்லை என்று நினைக்கிறேன்.

    துர்கா, இந்திய முஸ்லிம்களிடமிருந்து “நாம்” எதுவும் பெறவில்லை, தர வேண்டியதும் இல்லை. முஸ்லிம்கள் என்ன வேறு கிரகத்து ஜீவராசிகளா? “நாமில்” இந்திய முஸ்லிம்களும் அடக்கம். உங்கள் வாதப்படி சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதி மத ரீதியாக கணக்கெடுத்து அதற்கேற்றபடி அவர்கள் ஜாதி மதங்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்!

    திருமலை, குப்தா என்ன சொல்ல நினைத்தாரோ, எனக்கு தெரியாது. ஆனால் இந்த பதிவில் பொதுவாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கபடுபவர்கள் ஒதுக்கீட்டுக்கு எதிராக என்ன சொல்வார்களோ அந்த மாதிரி எழுதப்பட்டிருக்கிறது. மேலும் 70 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்கிறார். அவரே மறுபடியும் உயர் பதவிகளில் மூன்று நான்கு சதவிகிதம்தான் முஸ்லிம்கள் என்கிறார். முதல் பாராவில் எல்லா பதவிகளிலும் சேர்த்தும் ஏழெட்டு சதவிகிதம் என்கிறார். 70 சதவிகிதம் பேர் இட ஒதுக்கீடு லிஸ்டில் இருப்பது பயன் தரவில்லை என்று அவரே சொல்கிறார் இல்லையா?

    சிறுபான்மை மதத்தினருக்கு இட ஒதுக்கீடு என்பது ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்பதிலோ, இன்றைக்கு இருக்கும் இட ஒதுக்கீடு inefficient என்பதிலோ எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை. என்னுடைய கருத்தில் இன்றைய இட ஒதுக்கீட்டு திட்டத்தால் பயன் பெறுபவர்களில் ஒரு பதினைந்து சதவிகிதம் “தகுதியானவர்களாக” இருக்கலாம். ஆனால் இதை விட சிறந்த திட்டம் இன்றைக்கு இருக்கும் நிலையில் ப்ராக்டிகல் இல்லை என்று கருதுகிறேன். அரசு திட்டங்களில் 15% பேர் “சரியானவர்கள்” பயன் பெறுகிறார்கள் என்பது அரசு திட்டங்களுக்கு ஒரு high water mark என்பதை நினைவூட்டுகிறேன். பல நாட்களுக்கு முன் நான் எழுதிய ஒரு பதிவு இங்கே – https://koottanchoru.wordpress.com/2009/01/03/இட-ஒதுக்கீடு-சொந்த-அனுபவ/

  11. அம்மா துர்கா

    //நம் நாட்டுக்காகவும் நம் நாட்டு விடுதலைக்காகவும் உயிர்த் தியாகம் பொருள் தியாகம் கணக்கில்லாமல் செய்துள்ளவர்களில் சில முஸ்லீம்களும் உண்டு.//

    முஸ்லீம்கள் நாட்டு விடுதலைக்காக போராடிவிட்டு அதற்கு பெரிய கூலியும் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள். அந்தக் கூலிக்கு பெயர் தான் பாகிஸ்தான். இன்றைய நாள்படி விடுதலைக்கு போராடினோம் என்று சொல்ல எந்த முஸ்லீமுக்கும் தகுதி கிடையாது. மேலும் முஸ்லீம்களிடமிருந்து யார் என்ன பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். இந்தியாவில் உழைத்தால் உணவு. அவ்வளவே!

  12. kadamban – there is no institutionalized discrimination for muslims… discrimination exists only for hindus… You are taking as if all hungry people in india are muslims… Poor people exists in all religions.? All poor people need help, not poor people belonging to one religion only. Are people of this religion any special than people of other religions? Reservations are require – but for poor people of all religions.

  13. மத அடிப்படையிலோ சாதியின் அடிப்படையிலோ இன்று எவருக்கும் கல்வியிலோ ஆரசு வேலையிலோ வாய்ப்பு மறுக்கப்படும் நிலை இல்லை. அப்படியிருந்தும் எவருக்கேனும் கல்வியிலோ வேலைத் தகுதியிலோ வாய்ப்பு இல்லாமல் போகுமானால் அதற்கு அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலைமைதான் காரணமாக இருக்க முடியும். இட ஒதுக்கீடு என்பதாக ஒரு கருதுகோள் இல்லாத காலத்திலேயே முற்றிலும் சுய முயற்சியினால் கல்வியிலும் வேலைத் தகுதியிலும் உயர் சாதியினர் எனப்படுவோரைக் காட்டிலும் முன்னேறிய பல்ர் இருந்துள்ளனார். முதலில் கல்வி விலை மிக்க வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும். பின்னர் பொருளாதார அடிப்படையை மட்டுமே கருத்தில் கொண்டு உதவித் தொகை வழங்குதல், கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விசேஷ கூடுதல் பயிற்சி அளித்தல் ஆகிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வது சாதி மத வேற்றுமையைக் களைவதற்கான வழியாகும். சாதி மத அடிப்படையில் மக்களிடையே மனஸ்தாபங்க்ளும் வெறுப்புணர்வும் வளர்வதைத் த்டுக்கவும் இதுவே வழி.

  14. காங்கிரஸ் கட்சி பதவியில் அமர மற்றும் நீடிக்க எவர் மற்றும் எதை வேண்டுமானாலும் காவு கொடுக்கும்; இது சரித்திர உண்மை.

  15. முஸ்லிம்களின் அந்நிய செலாவணி மட்டும் இனிக்கிறதா?
    இந்திய சுகந்திரத்திர்க்காக 30%முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களால் கொருரமாக கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்லமட்டும் வாய் வலிக்குமே?
    அவர்களாலும் நமக்கு வாங்கித் தரப்பட்ட சுகந்திரத்தை அனுபவிக்கும் பொது
    அவர்களை ஒழிப்பதால் பகவான் நம்மை சும்மா விடுவாரா?
    முஸ்லிம்கள் நம் தேசத்தின் சுகந்திரத்திர்க்காகத்தான் ஆங்கிலமே கற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
    அவர்கள் நமக்கு துரோகமிழைத்து ஆங்கிலையனோடு கூட்டு சேர்ந்து நம்மைப்போன்று ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களின் வீட்டு நாய்களாக அவர்களும் மாறியிருந்தால் .
    நம் நாட்டின் சுகந்திரம் கனவாய்ப் போய் இருக்கும் .
    நீங்கள் இட ஒதுக்கீடு தராவிட்டால் என்ன ?
    நல்ல உள்ளங்களில் அவர்களுக்கு என்றுமே முழு இடம் உண்டு .

  16. நல்ல மார்க் வாங்கி மருத்துவம்.பொறியியல் கிடைக்காமல் போன எத்தனையோ ஹிந்துக்களை தெரியும் BC,OBC மாணவர்கள் ..general விட்டு விடுங்கள் அவர்கள் எப்பொழுதோ சொந்த நாட்டிலயே அகதிகளாக ஆக்க பட்டுவிட்டார்கள்,அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அமெரிக்கா,தனியார் துறை…MBC,SC,ST கோட்டாக்கள் நிரப்பவில்லை என்றால் அடுத்தவர்களுக்கு அது போகாது ,இது ரொம்ப பழைய கதை புது கதையும் அதே மாதிரி தான்,இப்போது முஸ்லிம் ,மற்றும் கிறித்துவர்கள்.கூட அவ்வளுவு தான் நடத்துங்கள் நாட்டை பிளவு படுத்தங்கள்,அப்பறம் யாரும் இப்போது எல்லாம் அரசாங்க வேலைகளை எதிர்பார்ப்பது இல்லை,விவரம் இல்லாதவர்கள் எல்லாம் பெரிய பதவியில்,அவர்களுக்கு நுணுக்கம் எதுவும் தெரிய வேண்டாம் ,குறைந்தபட்சமாக நேர்மை இருந்தாலே போதும்,சட்டத்திருக்கும்,மனசாட்சிக்கும்,கடவுளுக்கும் பயந்து வேலை செய்தால் போதும் ..இந்த RV அவர்களை எல்லோரும் அதிமேதாவி என்று ஒத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ் ,பாவம் எதையாவது சொல்லி எல்லோரும் தன்னை கவனிக்க வேடும் என்று எதிமரையாகவே வாதாடுகிறார், அமெரிக்காவில் உட்க்கார்ந்து கொண்டு, யதார்த்தை எல்லாம் இங்கே தத்துவம் மாதிரி விவாதித்துகொண்டு இருக்கிறார் .நான் ஒத்துக்கொண்டு விட்டேன் விவாதத்தில் இவர் பெரிய ஆள், தமிழ் ஹிந்து தளத்திற்கு ஒரு வேண்டுகோள்:அப்பறம் எதாவது புரியற மாதிரி சுருக்கி எழுத சொல்லுங்கள்..

  17. ஹிந்துக்கள் வாக்களிக்காததன் காரனமாகதான் அரசியல்வாதிகள் முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர்களையும் நாடுகிறார்கள் .எனவே மெஜாரிட்டி ஹிந்துகளை வோட்டு அளிக்கச் செய்வோம்.

  18. ராஜேஷ், // .நான் ஒத்துக்கொண்டு விட்டேன் விவாதத்தில் இவர் பெரிய ஆள், // உங்கள் பாராட்டுக்கு நன்றி!

  19. அன்புடன் தங்கப்பா விமர்சிக்க சொல்வது ,,,,

    முஸ்லிம்கள மண்ணின் மைந்தர்களா..? இல்லையா பகவானுக்கு பயந்து பதில் சொல்லுமாறு கேட்கிறேன். முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டுமானால் ஹிந்துககளுக்கு பயந்து வாழ வேண்டுமா…?

    தங்கப்பா.

  20. //thangappa
    29 March 2010 at 10:19 am

    அன்புடன் தங்கப்பா விமர்சிக்க சொல்வது ,,,,

    முஸ்லிம்கள மண்ணின் மைந்தர்களா..? இல்லையா பகவானுக்கு பயந்து பதில் சொல்லுமாறு கேட்கிறேன். முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டுமானால் ஹிந்துககளுக்கு பயந்து வாழ வேண்டுமா…?

    தங்கப்பா.//
    இப்போது இந்துக்கள் அல்லவா முஸ்லிம்களுக்கு பயந்து வாழ்கிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *