ஒவ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை அறுந்து விட்டது. 1978ல் நம் இசை பிரபஞ்சத்துக்குள் வந்த மாண்டலின் என்ற வாத்தியம் எப்போதைக்குமாக ஆழ்மௌனத்தில் ஆழ்ந்து விட்டது. ஆனால் அது உயிர்ப்பித்து நடமாட விட்ட ஸ்வரங்களுக்கு அழிவில்லை. அவை என்றென்றும் இந்தப் புவியின் இசை மண்டலத்தில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும்… அவரது இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்றோ அல்லது நடைபெற வேண்டும் என்றோ ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லையே. இது வரை தமிழ் நாட்டில் அரசியல்வாதி அல்லாத, சினிமாக் கலைஞர் அல்லாத எந்த சாதனையாளருக்காவது மரணத்தின் போது அரசு மரியாதை கொடுக்க பட்டிருக்கிறதா? என் நினைவு தெரிந்து இல்லை. நமது மாநில அரசின், சமூகத்தின் கலாசார மொண்ணைத் தனத்தின் அளவு அத்தகையது. இந்தக் கலைஞனின் மரணத்தை ஒரு சாக்காக வைத்தாவது அதை மாற்றுவோம். இதை தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையாகவே முன் வைப்போம்….
View More அஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்