சிறு வயதில் ரமணர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில் [..]
View More ரமணரின் கீதாசாரம் – 12Tag: ரமணாஸ்ரமம்
அமைதியின் ஓசை
வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது… அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்… திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை…
View More அமைதியின் ஓசைஅறியும் அறிவே அறிவு – 7
தனக்கு வெளியில் உள்ளது அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டிகள் ஆகுமே அன்றி, தானே ஆக முடியாது. வேத, உபநிஷத்துகள் அனைத்துமே “அது நீ” போன்ற மகா வாக்கியங்களைக் கூறுகின்றன. அவைகளை, நாம் மறந்து விட்ட நமது இயல்பு நிலையை நமக்கு நினைவூட்டுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாக்கியங்கள் தியானப் பயிற்சிக்கு உதவலாம். அதைக் கேட்டதும் சீடன் தனக்குள்ளே ஆழ்ந்து “இந்த நான் யார்?”, “இதன் தன்மை என்ன?” என்று விவேகத்துடன் தன்னுள் மூழ்கி ஆத்ம முத்தை அடைய வேண்டிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
View More அறியும் அறிவே அறிவு – 7இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5
…இது எழுதி முடிக்கப்பட்டதும் சில நாள்கள் கழிந்தபின் இன்னொன்றை கவனித்தேன். முன்னர் இருந்தது போல் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஒரு துடிப்பு அடங்கிவிட்டது. முதல் நாள் மலை உச்சிக்குச் சென்று வந்ததுபோல், அன்று எழுதத் துடிக்கும் உச்சிக்கும் சென்று வந்துவிட்டதுபோல் இருந்ததோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு….
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5குரு வலம் தந்த கிரி வலம்
“பகவத் கீதை”யின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குமாறு கேட்டேன். அவர் “பணியில் கருத்தாய் இரு; அது அளிக்கும் பலன்களில் நாட்டம் கொள்ளாதே” என்பதுதான் அதன் மையக் கருத்து என்றார். அதை உடனே புரிந்துகொண்டேன் என்றோ, ஒத்துக்கொண்டேன் என்றோ என்னால் சொல்ல முடியாது. அதன் மகிமையையும், பாரத கண்டத்தின் பண்டைய வழிகள் எப்படி மனிதனை நல்வாழ்க்கையின் மூலம் உயர்த்திச் செல்கிறது என்பதையும் நான் அப்போது உணர்ந்திராவிட்டாலும், அந்த கீதையின் கருத்துதான் என்னை மேலும் படித்து அறிந்து கொள்ள உதவியது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
View More குரு வலம் தந்த கிரி வலம்