காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்?

View More காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்

”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்” … இத்தாலியர்கள் இதே போல பல தடவை இந்திய SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது.. வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.. (தமிழில்: சேஷாத்ரி ராஜகோபாலன்)

View More சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

“நான் ஒரு மராட்டியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் முதலில் ஒரு இந்தியன்” என்று நாடு போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதற்காக அவரையும் பழித்தனர் சிவ சேனைத் தலைவர்கள். “சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது…”

View More “சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

பா.ஜ.க. கைவிட்ட ‘சமரசதா’

ராகுலின் பிறந்த நாளை சமரசதா தினமாகக் கடைப்பிடிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

View More பா.ஜ.க. கைவிட்ட ‘சமரசதா’