ராமஜன்ம பூமி இயக்கம் தேசிய அளவில் மையம் கொண்டது முதல், தன்னை முழுமையாக அதனுடன் பிணைத்துக் கொண்டார் அசோக் சிங்கல். 1990ல் முலாயம் தலைமையிலான உ.பி மாநில அரசு அமைதியாக கரசேவையில் ஈடுபட்டிருந்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, களத்தில் இறங்கி தொண்டர்களுடன் நின்று போராடியவர். முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு கரசேவர்களுடன் அவர் நிற்கும் புகைப்படம் வரலாற்றில் அழியாத இடம் பெற்று விட்டது… “மனுஸ்மிருதியின் சாதிய கருத்துக்களை வி.ஹி.ப நிராகரிக்கிறது. பண்பாடும் கலாசாரமும் கொண்ட ஒரு சமூகத்தில் அத்தகைய கருத்துக்களுக்கு எந்த இடமும் அளிக்கப் படக்கூடாது. நமது ஆதி மனுஸ்மிருதி என்றால் அது ஸ்ரீமத்பகவத்கீதை தான்… ” என்று கருத்துக் கூறினார் அவர். அதன் படியே, தலித்கள் உட்பட அனைத்து சாதி இந்துக்களுக்களும் அர்ச்சகராகும் உரிமைகளையும், வேதக் கல்விக்கான வாய்ப்புக்களையும் வி.ஹி.ப வலியுறுத்தி வந்திருக்கிறது…
View More அஞ்சலி: அஷோக் சிங்கல்Tag: ராமஜன்ம பூமி
சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?
சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்தவர். குகனின் வழிவந்த ‘நிஷாதர்கள்’ என்று தங்கள் பாரம்பரியத்தைப் பெருமிதமாக உணரும் சாதியினர் இவர்கள்… இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை இந்து விரோத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாக்குவதில் என்ன ஆச்சரியம்? கிறிஸ்தவ ஆதரவாளரகவோ அல்லது இந்து வெறுப்பைக் கக்கும் தலித் அரசியல்வாதியாகவோ வளர்ந்திருந்து, இதை விட மிக மோசமான “வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை” பேசியிருந்தால், அவரது பேச்சு ஒடுக்கப் பட்ட விளிம்பு நிலை சமுதாயத்தின் போர்க்குரலாக அங்கீகரிக்கப் பட்டிருக்கும். ஆனால், ராமாயண பிரசங்கம் செய்து பாஜகவில் சேர்ந்து அமைச்சராகவும் அல்லவா ஆகி விட்டார்…. “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட ஸ்ரீராமனின் குழந்தைகள்” என்று அவர் கூறியது “வெறுப்பு பேச்சுக்கு” மற்றொரு உதாரணமாகக் காட்டப் படுவது கொடுமையிலும் கொடுமை. ஒரு ஒப்பீட்டுக்காக, ஒரு நடக்க முடியாத விஷயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பாகிஸ்தானிலோ சவுதி அரேபியாவிலோ உள்ள ஒரு சுன்னி இஸ்லாமிய மௌல்வி….
View More சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?டிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..
அந்த சிலிர்ப்பூட்டும் சரித்திர நிகழ்வில் முதல் கல்லை எடுத்து வைத்தவர் காமேஷ்வர் சௌபல். பீகார் விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர். தலித்…. ஒரு தவறும் செய்யாத 400க்கும் மேற்பட்ட அப்பாவி இந்தியப் பிரஜைகள், உதிர்ந்து போன பழைய கும்மட்டங்கள் இடிக்கப் படலாம்; அவற்றைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் “மதச்சார்பின்மையின்” பெயரால் ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டனர்… இந்திய முஸ்லீம்களிடம் உள்ள பிரசினை, அவர்களது ஆக்கிரமிப்பு மனப்பான்மையோ, அல்லது அவர்களுக்கு சொந்தமில்லாததைக் கூட அநியாயமாக உரிமை கோரும் தீவிரமோ அல்ல. இதற்கெல்லாம் உந்துதல் அளிக்கும் ஒரு மதத்தை அவர்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவது தான்… [உண்மையான] மதம் என்பது எப்போதும் கருத்து நெறிகளாகவே இருக்க வேண்டும். கட்டளைகளாக இருக்க முடியாது. அது கட்டளைகளாக மட்டுமே கீழிறங்கும் போது, மதம் என்ற மதிப்பை இழக்கிறது….
View More டிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்
சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார்.
நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.
View More உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்
வாசகர்கள் அனுப்பிய பல கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றிற்கான பதில்களை நீங்கள் tamizh.hindu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள மறுமொழிப் பெட்டியிலும் உங்கள் பதில்களைத் தரலாம்.
பதில்கள் வந்து சேரக் கடைசி தேதி: 27 அக்டோபர் 2010
View More தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்