தான் உண்மையில் என்ன செய்கிறோம், தனது உண்மையான இலக்கு, கோட்பாடு பற்றியெல்லாம் பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ். பேசுவதே இல்லை. சேவையை ஊருக்குச் சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன என்று ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும் இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்..
View More நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்Tag: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்
ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்
தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….
View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!
இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது…. மோடியின் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் திட்டமிட்டு நடத்தியது பாஜகவின் நிகரற்ற சாதனை…. விலைக்கு வாங்கப்படும் ஊடகங்களைக் கொண்டு அரசியல் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியால் பாஜக வெகுவாக பாதிக்கப்பட்டுவந்தது. அந்நிலையும் இம்முறை மாறியது. காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலை ஊடகங்களின் காங்கிரஸ் ஆதரவுப் போக்கிற்கு கடிவாளமானது…. சுயநல நாட்டம் மிகுந்த அரசியல்களத்தில் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை இணைத்து, ஓரணியாகக் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. அதை சங்கமே சாதித்தது….
View More மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்
அந்தப் பையனின் அப்பாவுடையது போன்றது தான் இன்றும் இந்திய சமூகத்தின் பொது மனநிலை. ஆனால் அத்தகைய மன விலகல்களை முறிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது இந்துத்துவம். சராசரியை விட அதிகமாக, ஆர் எஸ் எஸ் இயக்கத் தொண்டர்களின் குடும்பங்களில் சாதி இணக்கத் திருமணங்கள் நடக்கின்றன என்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்… முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவது எளிது. ஆனால், சாதி பேதம், ஏற்றத் தாழ்வு இவற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு கடினமான வேலை. காரணம், இந்தப் போராட்டம் நம்மவர்களுக்கு இடையேயானது…. முற்போக்குகளும் சோஷலிஸ்டுகளும் காங்கிரஸ் அரசியல்வாதிகளும் உள்ளூர அம்பேத்கருக்கு இந்த கௌரவம் அளிக்கப் படுவதை விரும்பவில்லை. அதற்கான பழியை இந்துத்துவம் மீது போடுவதற்கான பொன்னான வாய்ப்பை எதிர்பாத்திருந்தனர். ஆனால் ஆர் எஸ் எஸ் அதை முழுவதுமாகப் பொய்யாக்கியது….
View More ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி
வாழ்வே தவமாக தேச நலனுக்கும், இந்து ஒற்றுமைக்கும் பாடுபட்ட திரு கு.சி.சுதர்ஷன் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி… தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார்….
View More அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜிகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக பிப்-12 ஞாயிறு அன்று கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு.. 25,000 ஸ்வயம் சேவகர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அரு.இராமலிங்கம், ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத்.. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்… பல துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்… வரவேற்புக் குழுவில் சமூகப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்..
View More குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்வீரமுண்டு… வெற்றியுண்டு!
இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]
View More வீரமுண்டு… வெற்றியுண்டு!