தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது. தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்…. கோழைகளும், பயத்தால் முடியாதவர்களுமே விதி என்று சொல்லி செயல்களைத் தவிர்ப்பார்கள். தனது உரிமையை நிலை நாட்டக்கூடிய வலிமை கொண்டோர் விதியை எதிர்த்துப் போராடுவார்கள்.. வேதங்களோ, சாஸ்திரங்களோ ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தந்தச் சூழ்நிலையைத்தான் கவனிக்கவேண்டும். மனைவிக்கு இந்த மாதிரி துயரம் வந்திருக்குமானால் இதேபோல் சேவை செய்யவேண்டும் என்று கணவனது கடமையாகச் சொல்லப்பட்டிருக்கும்..
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5Tag: வரம்
இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4
தர்ம சிந்தனை மிக்க, பண்பு, ஒழுக்கம் மிக்கவும் உள்ள மனிதர்களின் மனம்கூட இடம், காலம், தேவைக்கேற்ப நிலையில்லாத வண்ணம் மாறலாம் என்பதே எனது எண்ணம்.. பருவ காலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், ஆறுகள் அனைத்தின் நீரையும் தன்னகத்தே கொள்ளும் கடல் என்றும் உள்ள தனது கரை என்னும் சிறிய எல்லையை மதித்து அதைத் தாண்டுவதில்லை… அவள் என்ன வந்தாலும் தனக்கு வேண்டியதைப் பெறாமல் விடுவதாக இல்லை. அவள் தசரதரைக் கோழை என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத கையாலாகதவன் என்றும் ஏசினாள். தங்களுக்கு என்னதான் இழப்பு வந்திருந்தாலும், தங்கள் வாக்கைக் காப்பற்றியவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4அவ்வரங்கள் இவ்வரங்கள்
இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.
View More அவ்வரங்கள் இவ்வரங்கள்