ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்

ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..

View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்… இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்… பூவுக்கு முள் முரண்…நீருக்கு நெருப்பு முரண்… இரவுக்குப் பகல் முரண்… சூரியனுக்கு நிலவு முரண்… உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது… அதுபோலவே முரண்களாலும் ஆனது… அறங்கள் முரண்படவில்லை… இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே அகலாது அணுகாது… நல்லது ஐயனே… இப்போது லேசாகப் புரிகிறது…

View More திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

“என்ன இது? ஒரு நாய்க்கு இத்தனை பரிவா? என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா? இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும்? விட்டுவிட்டு வாருங்கள்!” என்று கத்தினாள் பாஞ்சாலி…. விண்ணவரில் சிறந்தவரே! பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி என்று என்று உணரும் திறம் இருக்கிறது. எனவே நான் கற்று உணர்ந்து விண்ணுலக்கு வர உறுதி எடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை….

View More நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

வியாசன் எனும் வானுயர் இமயம்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு “வியாசர்களும்” ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது… “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை…

View More வியாசன் எனும் வானுயர் இமயம்

திரௌபதியின் கேள்வி

அநியாயம் எனும் நெருப்பால் சுடப் பட்டு, துயரம் இழைக்கப் பட்டு, நீதிமான்களின் சபையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்டு முறையிடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அந்த முறையீட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதோ, பொய்யாக பதிலுரைப்பதோ இரண்டுமே தரும துரோகம்…. எது தர்மம், எது அதர்மம் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அரசாட்சியின் மூலமாக, சாஸ்திரங்களின் மூலமாக அந்த அதிகாரம் வழங்கப் பட்டவர்கள் முறை தவறும் போது, அநீதி இழைக்கும் போது, ஒரு சாமானியன் என்ன செய்வது?…. உலகமயமாக்கல் என்னும் பகடையாட்டத்தில் நாமே தேர்ந்தெடுத்த நமது அரசாங்கம், நம் ஒவ்வொருவரையும் பணயப் பொருளாக வைக்கும் போதெல்லாம் அந்தக் கேள்வி நம் முன் வந்து நிற்கிறது…

View More திரௌபதியின் கேள்வி

நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?

மேம்போக்காக பார்க்க இந்திய அமெரிக்க சட்டங்களின் அறிமுக பிரகடனங்கள் (preamble) ஒன்று போல இருப்பது போல தோன்றும் . ஆனால் அதில் நுண்ணிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் சட்ட வல்லுநர், ஆர்.ஜி.சதுர்வேதி . அமெரிக்க பிரகடனம் ‘establish justice’ என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice’ என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது – அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது ஒரு primordial reality. சட்டம் அந்த நீதியை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் ஒரு கருவி…

View More நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?

சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது…. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்….கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்….

View More சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்

தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்
கைவிடாது எம்மை நீ ஆண்டருள் செய்குவாய்
பவக்கடல் தாண்டவே செய்குவாய் தெய்வமே
நின்பதம் எம்அரும் தோணியாய் நிற்குமே….

ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு எண்ணிடும்
எல்லாப் பொருட்களும் எண்ணி முடித்தபின்
எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம்உளம்
நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய்…

அன்னமும் ஆடையும் தேவையாம் யாவுமே
இன்னல்ஒன் றின்றியே தந்தெமைக் காத்து, மேல்
செல்வராய் மாற்றிடும் நீ ஒரு மூர்த்தியே
வல்லமை உள்ளவன் எங்கட்குத் தம்பிரான்….

View More தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்

வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்

இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியவில்லை . இந்த மரணம் சமூகத்தை நோக்கி ,அதன் அறத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறது… சம கால ஆண்களின் பாலியல் சிந்தனை வறட்சி கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கிறது. இந்த சமூகத்தின் ஆகப்பெரிய நோயாக பாலியல் தேவை தான் எழுந்து நிற்பதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அடுத்து காதல் பற்றிய பிதற்றல்களும், அதன் புனிதத்தன்மை ,இயல்பு பற்றிய கோட்பாடுகள் அதை ஒரு பாலைவன மதம் அளவுக்கு தீவிரமான அடிப்படைவாத சித்தாந்தங்களை முன்னிறுத்துகிறது… அரசிடம் போதுமான அளவு சம்பளம் பெறும் ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை கீழ்த்தரமாக நடத்த தூண்டுவது எது?…. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமில வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், நம்பிக்கையையும் அளிக்க பெரும் முயற்சியை செலவிட்டு வருகிறது…

View More வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

“எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை” – இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி…. எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது…. சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம் காண்பிக்கப்படும்போது, அதை அவர்கள் பலமின்மை என்று தவறாக நினைக்கிறார்கள்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24