கடந்த மாதம் அக்டோபர்-21 அன்று மறைந்த பெரியவர், கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் நினைவாக, ஆதாரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நாள் 15-நவம்பர் 2015 ஞாயிறு காலை 10 மணி. இடம்: கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட், மயிலாப்பூர் (அமிர்தாஞ்சன் – விவேகானந்தா கல்லூரி வழியில்). திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆர்.வெங்கடேஷ், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக. அழைப்பிதழ் கீழே…
View More சென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறுTag: வெங்கட் சுவாமிநாதன்
ஒரு நிஷ்காம கர்மி
உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….
View More ஒரு நிஷ்காம கர்மிபோகப் போகத் தெரியும் – 31
’தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தியாகங்கள் பல செய்தவர்கள் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் எந்தவிதமான தேசிய மரியாதைக்கும் லாயக்கற்றவர்களான திமுக-வினர் பதவியும் அதிகாரமும் பெற்று, காங்கிரசுக்கு சவால்விட்டுத் திரிகிற கொடுமை சகிக்க முடியாமலிருந்தது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் நோய்மாதிரிப் பரவிவந்த அவர்களது போலிப் புகழும் பேசிய பொய்களும் மறுத்துரைக்கப்படாமலிருப்பது ஒரு தேசிய அறிவுலக அவமானம் என்று நான் மனம் புழுங்கினேன்.’ – ஜெயகாந்தன்.
View More போகப் போகத் தெரியும் – 31