குழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு.
View More அட்சய பாத்திரம்