இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம்… எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள்…
View More வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்Tag: அந்தணர்கள்
ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்
ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேர்ப்பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆயினும் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்று, வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்கின்ற, வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு முதலான அனைத்து இந்து தெய்வங்களையும் பேதமின்றி வழிபடுபவர்களாக உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக இச்சொல் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர்.. ஸ்மார்த்தர்கள் விபூதி அணிவது என்பது தொன்றுதொட்டு வருகின்ற வழக்கம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. பாரதம் முழுவதும் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்…
View More ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்
மந்திரங்களில் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” – இந்த சுலோகத்தை வைத்து வழக்கம் போல இந்துமத வெறுப்பு பிரசாரங்கள் ஓடுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்து எழுதிவிட்டார்கள் இத்யாதி. இதைச் சரியான நோக்கில் புரிந்து கொள்வது முக்கியம்…
View More பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்
ஆதிசைவர் என்ற சொல்லின் பொருளும் அவ்வாறு அழைக்கப்படும் மரபார் குறித்த தெளிவின்மையும் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருப்பதால் இந்த வினா விடைத் தொகுப்பை எழுதியுள்ளேன்… சைவாகமங்கள் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பொதுயுகம் 5ம் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன. இதன்படி, சைவாகம மரபு 1500 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிபடக் கூறலாம்.. அடிப்படையில் வைதிகர்கள் என்பதால், மற்ற பிராமணர்களைப் போலவே, ஆண்கள் உபநயனம் (பூணுல்) என்ற சடங்கின் மூலம் பிரம்மோபதேசம் பெற்று வேதங்களை ஓதுவதற்கும் வேள்விக் கிரியைகளை செய்வதற்கும் தகுதி பெறுகின்றனர்.. அவ்வாறாயின் கடந்த காலங்களில் ஏன் பிற அந்தணர்கள் கோயில் அர்ச்சகர்களை, குறிப்பாக ஆதிசைவர்களை ஒதுக்கி வைத்தனர்? இலங்கையிலுள்ள அந்தணர்கள் என்பது இவர்கள் தானா?…
View More ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்