இரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்….. எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு சபைகளும் அங்கீகரித்து ஒரு முடிவுக்கு வரும் வரை ஒரு சில பணியாளர்கள் தவிர பிறர் வேலைக்கு வர வேண்டாம் வீட்டில் இருங்கள் அல்லது பீச்சுக்குப் போங்கள். பின்னால் சொல்லி அனுப்புகிறோம் என்று கட்டாய சம்பளமில்லாத விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நமது தமிழ் பத்திரிகைகளின் அமெரிக்க நாட்டு வல்லுனர்கள் எழுதுவது போல எவரும் டிஸ்மிஸ் செய்யப் படவில்லை அமெரிக்கா நிதி இல்லாமல் மஞ்சக் கடுதாசிக் கொடுத்து போண்டியாகவும் இல்லை….
View More குரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா