“நீ ஒரு கோழை. கர்ணனுக்குப் பயந்துகொண்டு இங்கே ஓடிவந்திருக்கிறாய். அத்தனை அதிவில்லாளர்களையும் அடித்துத் துவம்சம் செய்த கர்ணனை — அபிமன்யுவை அநியாயமாகக் கொல்வதற்காக அவனது பின்புறமாக நின்று, வில்லைத் துண்டித்துச் செயலிழக்கச் செய்தவனை — வீரத்தில் உன்னைவிடச் சிறந்த உன் செல்வன் விழக் காரணமாவிருந்த கள்வனை — பாஞ்சாலியின் துகில் உரியக் காரணமாக இருந்த அந்த மாபாவியை விட்டுவிட்டு, இங்கென்ன செய்கிறாய்? பேசாமல் உன் காண்டீவத்தையும், வீரவாளையும் கேசவனிடம் கொடுத்துவிட்டு, அவனுக்குச் சாரதியாக இருந்துவிடு. அவன் கர்ணனை அரைநொடியில் கொன்றுவிடுவான்”
View More அருச்சுனனின் ஆத்திரம்Tag: அஸ்வத்தாமன்
நிழல் [சிறுகதை]
முறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்… ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.
கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்கள் ரத்தம் பாய்ந்து சிவந்தன… பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது…