புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்

புதுக்கோட்டையில் திருகோகர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள்… அழகாகப் பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்குத் தன் சொந்தக் காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்…. இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை… மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்…

View More புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்

ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்

உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி,…… தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள் தரும் சாட்சியம்….

View More ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்