பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது குறித்து இந்து தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை. அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன..
View More பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்Tag: இந்தியா பாகிஸ்தான் பிரிவினை
நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?
கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை…
View More நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்
அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”… காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன….
View More காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்வன்முறையே வரலாறாய்…- 32
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது… 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998 கணக்கு) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்…
View More வன்முறையே வரலாறாய்…- 32வன்முறையே வரலாறாய்…- 25
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு சிறிது காலம் முன்பு நடந்த வன்முறைகள் பயங்கரமானவை.. ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த ஒரு கிராமத்தில், மதம் மாற மறுத்த ஒரு கிராமத்திலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கியர்கள், கிராமத்தின் மத்தியில் குடும்பத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் விறகுகளை அடுக்கிய முஸ்லிம் வெறியர்கள் உயிருடன் அவர்களை எரித்துக் கொன்றார்கள். இளம்பெண்களைத் தூக்கி கொண்டு ஓடிய முஸ்லிம் காலிகள் அவர்களைத் திறந்த வெளியிலேயே கற்பழித்தார்கள். இதனைக் கண்டு மனம் வெதும்பிய பல இந்து, சீக்கியப் பெண்கள் உடனடியாகத் தற்கொலை செய்து கொண்டார்கள்… பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களின் மீது சிறிதும் மனிதத்தன்மையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குர்பச்சன் சிங் தாலிப் அவரது Muslim League Attacks on Sikhs and Hindus in the Punjab 1947 என்னும் புத்தகத்தில் பஞ்சாப் பகுதியில் மட்டும் நடந்த இதுபோன்ற 592 சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். அவை அத்தனையும் முஸ்லிம்களால் “மட்டுமே” நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஒரு இடத்திலும் இந்து/சீக்கியர்கள் இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தாங்களாக முன்னெடுத்து நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….
View More வன்முறையே வரலாறாய்…- 25