திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.
View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்Tag: இந்து இயக்கங்கள்
நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்
தான் உண்மையில் என்ன செய்கிறோம், தனது உண்மையான இலக்கு, கோட்பாடு பற்றியெல்லாம் பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ். பேசுவதே இல்லை. சேவையை ஊருக்குச் சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன என்று ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும் இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்..
View More நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்
வரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே கீழே நிலையான பெரிய ஆலயம் இருப்பதற்குரிய சான்றுகள் கிடைத்தது…. இங்கு ஆலயம் இருந்தது பற்றிய எங்கள் கண்டுபிடிப்பை அப்போதைய அரசிடமும் எடுத்து சொன்னோம். அப்பொழுதும் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வழி இருந்தது. இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் அப்போதும் அதை கெடுத்தார்கள். ஆர் எஸ் சர்மா, டி என் ஜா, அத்தார் அலி, சூரஜ் பென், ரொமிலா தாப்பர் இவர்களை எல்லாம் தலைமை தாங்கி வழி நடத்தும் இர்பான் ஹபீப் இவர்களே இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் அரசியல் செய்தவர்கள். இந்திய அரசின் உயர் கல்வி , மற்ரும் பண்பாட்டு அமைப்புகளில் ஊடுருவி இருந்த எளிய மார்க்ஸிய அரசியல்வாதிகள். சுமூகமான தீர்வு எதுவும் நடந்து விடக்கூடாது என்று உறுதியாக அரசியல் செய்தார்கள். அன்று இப்பிரச்சினையை தீர்த்திருந்தால் நிறைய உயிர் சேதங்களையும், மக்களுக்கிடையே மனப்பிளவுகளையும் தவிர்த்திருக்கலாம்.
தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல…
அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!
நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும்… அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.
View More அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்
கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…
View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?… அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை… மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான்…
View More வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்உலக இந்து சம்மேளனம் 2014
இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று… “2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை” என்று தனது உரையில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்… 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல்… உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார்…50 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், கலைப் பிரபலங்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், பல்துறை அறிஞர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டின் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர்…
View More உலக இந்து சம்மேளனம் 2014சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14
சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14…
View More சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்
பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
View More விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….
View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்