மோடியைக் கண்டவுடன் மக்கள் அடைந்த உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இதுதான் உண்மையான எழுச்சி. தமிழர்கள் முகம் கோணாமல் அகம் நிறைந்து ஒரு ஹிந்தி சொற்பொழிவை ஒரு மணி நேரம் கேட்டார்கள். வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டே பழக்கப்பட்ட மக்கள் வந்தேமாதரம் என்று கோஷம் போட்டார்கள்… இந்த கும்பலெல்லாம் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு செலுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த கட்சி கூட்டத்திற்கு வரும் போது மட்டும் ஒழுங்கு எப்படி இயல்பாக வந்து விடுகிறது என்று யோசித்தால் ஒன்று புரியும். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி… பொதுவாக எல்லா கட்சி மாநாடுகளிலும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் அந்த இடம் ஒரு மாபெரும் குப்பை மேடு போல இருக்கும். டாஸ்மாக் பாட்டில்கள், துண்டுகள், செருப்புகள் இவையெல்லாம் கிடக்கும். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்தைச் சுற்றிவந்து பார்த்தபோது இவை எதுவும் தென்படவில்லை….
View More திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்Tag: இளந்தாமரை மாநாடு
நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்
நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்… தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்…
View More நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2
எந்த ஒரு தேர்தலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு அனுதாப அலையும் வீசாத பட்சத்தில் ஆட்சி மாற்றமே பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த வழக்கமான நடைமுறை இம்முறை மாறுகிறது. இந்தத் தேர்தல்- செயலற்ற, சுயநல வடிவான, ஊழல் மலிந்த ஐ.மு.கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பும் ஒரு செயல்வீரரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வானது, நாடு முழுவதுமே ஒரு உந்துசக்தியைப் பாய்ச்சி இருக்கிறது…. “செப்டம்பர்-26 அன்று திருச்சி வருகை தரும் மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்கலாம்”… இந்த 4 கட்சிகளும், இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்படும் நிலை உருவாகும். இந்திய ஜனநாயகக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கமும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு துணையாக நிற்கும்…
View More தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்
இளந்தாமரை மாநாட்டில் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் நரேந்திர மோடி…
View More செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்