சிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் சமீபத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது…இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார், தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக… இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும் பேராசைக்காரர்களும், திருடர்களும், கொள்ளையர்களும், பணப்பேய்களும் மலிந்துவிட்ட காலத்தில் கூட கடந்த காலத்தின் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது….
View More இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்Tag: ஒரிஸ்ஸா ஆதிவாசிகள்
நினைவுகளின் சுவட்டில்- கலுங்கா
ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்தத் தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை… அந்த ஆதிவாசிகளுக்கு ஆதிகாலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும்.. வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது?…
View More நினைவுகளின் சுவட்டில்- கலுங்கா