தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
View More நாடும் நமதே! நாற்பதும் நமதே!Tag: ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன.
View More ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினைசின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…
அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.
காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.
View More சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…ஜெயிக்கப் பிறந்தவர்!
ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில் போட்டியாளர்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தலைவியாகவும் காலம் அவரை புடம்போட்டது….
View More ஜெயிக்கப் பிறந்தவர்!தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?
செம்படம்பர் மாதம் முதல் 2015 துவக்க காலம் வரை தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது, இம்மாதிரியான கேள்வி எழ முக்கிய காரணம், தமிழகத்தின் முதலவராக பதவி ஏற்ற திருவாளர் பன்னீர்செல்வம், இன்னும் தன்னை ஒரு நிதி அமைச்சரகவே கருதுவதால் ஏற்படும் பிரச்சனையாகும்… கள்ளநோட்டு புழக்கம் அதிக அளவில் நடமாடுவதாக உளவுத் துறையினர் தகவல்களை கொடுத்தாலும், கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதில் அக்கரை காட்டாத அரசு… மருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் பரிதபமாக பலியனதை கண்டு கொள்ளாத அரசு இந்த அரசு. மருத்துவ மனைகளில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் நியமிக்காமல் காலந் தாழ்த்தியதால் ஏற்பட்ட இழப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாத அரசு…
View More தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?குழப்ப நிலையில் தமிழக அரசியல்
தமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய…
View More குழப்ப நிலையில் தமிழக அரசியல்