ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?

ஏதோ அரசியல் காரணத்திற்காக முஸ்லிம் ஆதரவு நிலை எடுக்கப் போனவர் படிப்படியாக groom செய்யப்பட்டு, மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, இஸ்லாம் என்னும் இருள் படுகுழியில் ஒரு தமிழ்ப்பெண் விழுந்திருக்கிறார் என்பது சகஜமான விஷயமல்ல, மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஒரு கட்டத்தில் மதம் மாறாவிட்டால் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்ற அளவுக்கான அழுத்தம் அவருக்குத் தரப்பட்டிருக்கலாம்.. இஸ்லாமிய ஜிகாதி கழுகுகளால் கொத்திச் செல்லப் படும் இத்தகைய ஆபத்தான நிலையிலுள்ளவர்களுக்கு அந்தக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பு தரும் அளவுக்கு காவல்துறையும் மற்ற இந்து சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. குறிப்பாக இளம் ஆண், பெண்களுக்கு இந்துத் தரப்பிலிருந்து சரியான counseling தரும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை.

View More ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே – என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். காரணம்? சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்…..

View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3