முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா உடனான தொடர்பு தமிழ்ஹிந்து இணையதளம் மூலமாகவே கிடைத்தது. எனது அனுபவங்களையும், பேராசிரியர் ஐயாவிடமிருந்து நான் கற்றவற்றின் பயன்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்… எனது நண்பர்கள் வட்டத்தில் பிள்ளைத்தமிழ் தொடர்பான செய்திகள் வேண்டுமெனில் என்னைத்தொடர்பு கொள்வது வழக்கம். இசை நிகழ்ச்சிகளில் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை யாருமே பாடுவதில்லை எனும் குறை எனக்கு இருந்து வந்தது…
View More சிவமாக்கும் தெய்வம்Tag: குழந்தைப் பாசம்
புருஷ லட்சணம் [சிறுகதை]
சிகண்டி அத்தனை மலர்ந்த முகத்தை கிருஷ்ணன் ஒருவனிடம்தான் இது வரை கண்டிருக்கிறான். பீஷ்மர் புன்னகைத்து சிகண்டி இது வரை பார்த்ததே இல்லை, அவன் பார்த்ததெல்லாம் தீர்க்கமான பார்வையுடன் போரிடும், ஆணையிடும் பீஷ்மரைத்தான். இன்றோ பார்ப்பவரின் மனதையும் மலரச் செய்யும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் அவன் கண்டான்… சிகண்டியின் முகம் விகசித்தது. அவன் தலையை குனிந்துகொண்டான். ஆனால் அவன் கன்னம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. அவன் தோள்கள் லேசாக குலுங்கின. பீஷ்மர் அவனையே நோக்கினார். பிறகு அவரும் சிரிக்க ஆரம்பித்தார். சிகண்டி வாயைப் பொத்திக் கொண்டு மேலும் சிரித்தான்….
View More புருஷ லட்சணம் [சிறுகதை]ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு
அந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்…. ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம்? இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை… ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க….”
View More ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு