ஒரு பெரிய பிரசினை வேண்டும். மணி ரத்தினத்துக்கு அது ஒரு கோட்ஸ்டாண்ட். அதில் அவர் தன் காதல் கதையை, பாடல்களை, நடனங்களை, அழகான லொகேஷன்களை, அழகான புகைப்படக் காட்சிகளைத் தொங்க விடுவார்…. ஆனாலும் ரஸவாதம் செய்வதில் மணிரத்தினத்திடம் ஒரு கெட்டிக்காரத்தனம், இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஓடும் ரயில் வண்டியின் மேல் கும்மாங்குத்து ஆட வைத்த தைரியம் வேறு யாருக்கு வந்தது?… என்ன கற்பனை ஐயா, கலை உலக மேதைக்கு! கல்யாணம் எல்லாம் நல்லா நடந்திச்சாய்யா,? என்று கேட்டால் சாப்பாட்டிலே வடை போட்டாங்க, பிரமாதம்” என்று சொல்ல வேண்டி வந்தால் என்ன அர்த்தம்?… மகாதேவன் ரிபேர் வேலையில் ஒரே பாசமழை பொழிகிறது. சிவாஜி கணேசன் சாவித்ரி ஜோடியைத் தான் புக் செய்ய வேண்டியிருக்கும்…ஆனாலும் மகாதேவன் ஒரு விக்கிரக விநாசன். அந்த காரியத்தை மிக நன்றாகச் செய்கிறார். திரை உலகிலிருந்து இப்படி ஒருவர் வந்துள்ளது சந்தோஷம் தரும் ஒன்று. இங்கு விக்கிரஹங்கள் நிறைய மண்டிக் கிடக்கின்றன…
View More வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”Tag: கேளிக்கை சினிமா
என் பார்வையில் தமிழ் சினிமா
தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப் பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை. அது சந்தைக்கு தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை. ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக் கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்…. முற்றிலும் மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைப் பற்றி சொல்கிறேன். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். மொழி ஒடியா, படத்தின் பெயர்….
View More என் பார்வையில் தமிழ் சினிமா