தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் அவர். எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள்? திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்?….

View More தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்… பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்” என்று உருகுகின்றார் சடகோபர்…

View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2