தர்க்கம் கொண்டு, ஒரு குறட்பாவை வைத்தே, ஸ்ரீவிஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு விளக்கமும், பத்து உபநிஷத் வாக்கியங்களுக்கு சமன்வயமும், பிரம்மசூத்ரங்களுக்கு பொருத்தமும் சொல்லலாம். திருவள்ளுவர் ஒரு வைதீகர் / வேதாந்தி /உத்தர மீமாம்ஸாகாரர் /விஶிஷ்ட அத்வைதி /ஸ்ரீவைணவர் என்று முடிக்கின்றேன்.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5Tag: சமணம்
கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்
மருள் நீக்கியார் அவர் மடிமேல் விழுந்து அழுதார். “அன்னையும் அத்தனும் சென்ற பின்னும் நீங்கள் துணை இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். நீங்களும் என்னைத் தனியே விட்டு விட்டால் உங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன். இது நிச்சயம்” என்று அரற்றினார். இதைக் கேட்ட திலகவதியார், தம்பியின் முகத்தைத் துடைத்து ஆறுதல் கூறினாள். தம்பி உயிரோடு இருக்க வேண்டுமே என்ற கருணையினால் தம் உயிரைத் தாங்கிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து தவம் மேற் கொண்டு வாழ்ந்து வந்தார்…. உன் கருணை வெள்ளத்தில் ஆழும் தகுதி எனக்குண்டோ? என்னைத் தடுத்தாட்கொள்ள வந்த இந்தச் சூலைநோய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?” என்று ஈசனை வணங்கினார். அப்பொழுது ஓர் அசரீரி வாக்கு, “பதிகத் தொடை பாடிய பான்மையால் நாவுக்கரசர் என்னும் நாமம் இன்று முதல் உனக்கு வழங்கப் பெறும்” என்று வானத்தில் ஒலித்தது. இது கேட்ட மக்கள் பலவித வாத்தியங்களை முழக்கினார்கள்…..
View More கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்
ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள்…
View More கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்என்னதான் செய்தது பக்தி இயக்கம்?
பகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால் பக்தி இயக்கம் என்ன செய்தது? பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன?…. பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய மக்களின் காட்சிகளை காணலாம். கழை கூத்தாடிகள், பிரசவம் பார்க்கும் மருத்துவ மகளிர், உழவர், மாடு மேய்ப்போர், வேடர் – என….
View More என்னதான் செய்தது பக்தி இயக்கம்?புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?
View More புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலைமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி
முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.
View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டிஅரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?
மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது – இன்றைய தமிழக முதல்வர் உட்பட… திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்?
View More அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?