வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்… இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?….
View More வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?Tag: செயிண்ட் தாமஸ்
[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !
[….] [தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.
View More [பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !Breaking India புத்தக வெளியீட்டு விழா
சென்னை, பிப்ரவரி-3. சுவாமி தயானந்த சரஸ்வதி புத்தகத்தை வெளியிடுகிறார்…அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலிருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது…
View More Breaking India புத்தக வெளியீட்டு விழாஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்
தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்று சொன்னால் என்ன ஆகிவிடும். ஏன் நாம் இதனை எதிர்க்க வேண்டும்? என சிலர் கேட்கலாம். இந்த தலைமுறையின் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் இந்த முயற்சிகளின் பின்னால் இருக்கும் வலைப்பின்னல்களை வெளிக்கொணர்கிறார்.
ஜெயமோகனின் தெளிவான கட்டுரையை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.
View More தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்