காய்த்த மரம் தான் கல்லடி படும். வற்றிய குளத்தை நாடி எந்தப் பறவையும் வராது. இன்றைய சூழலில் பாஜக மட்டுமே நம்பிக்கை தரும் கட்சியாக மிளிர்கிறது. எனவே, மக்களின் மனநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் இப்போது பாஜகவை கடுமையாக எதிர்க்கத் துவங்கி உள்ளன. மொத்த்தில் தமிழக அளவில் தேர்தலின் நாயகியாக இருந்த ஜெயலலிதாவின் இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார் மோடி… தேசிய அளவில் காணப்பட்ட மோடி மைய அரசியல் தமிழகத்திலும் வந்துவிட்டது. இதுவே, பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி தான். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லும் கட்சியினரை விட, ஏற்கனவே என்ன சாதித்திருக்கிறார் என்பதைத் தான் நாட்டின் வாக்காளர் முக்கியமாகக் கவனிக்கிறார்…..
View More தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!Tag: ஜெயலலிதா
தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!
எண்ணியிருந்தது ஈடேறுகிறது! தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய…
View More தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி
மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….
View More மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணிதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?
அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது… திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம். அம்மா, அக்கா, தங்கை, அடுத்தவன் மனைவி,மகள் என்பதெல்லாம் சமூகம் நம் மேல் இட்ட குறியீடு தான் பாலியல் சிந்தனைகளுக்கும் செய்கைகளுக்கும் அது தடையாக இருக்க கூடாது. என்பதாக துவங்கி சாராயம் குடிப்பது எப்போதும் நல்லது. குடித்து விட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளை உதைப்பது நாகரீகம். முட்டாள்கள் தான் படிக்க வேண்டும். யாரையும் மதிக்க வேண்டியதில்லை.ஆபாச வசை சொல் தான் இயல்பானது, நாகரீக மொழியில் மரியாதையாக பேசுவது பெரும் பாவம். குடும்பம் குழந்தை குட்டிகள் என சமூகத்தோடு இணைந்து வாழ்வது தண்டனைக்குரிய செயலாக முன்வைத்தது இந்த எதிர் கலாச்சாரமே பாமரர்களையும் சில அறிவுள்ளவர்களையும் ஈர்த்து….
View More திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!
இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று…
View More பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 1
“தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம்.…
View More தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 1இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?
2009 ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது ஏதோ வேற்றுக் கிரகத்தில் நடப்பது போல வேடிக்கை பார்த்திருந்த அதே தமிழகம், இப்போது குதித்துக் கொந்தளிக்கிறது…. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து எங்காவது ஒரு வார்த்தை இருக்கிறதா? அல்லது, இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்த கண்டனங்கள் எதாவது இருக்கின்றனவா? இந்த அதிமேதாவித் தனமான தீர்மானத்தை ஆதரிக்கத் தான் இரண்டு வாரம் யோசித்தது நமது மத்திய அரசு. இந்தத் தீர்மானத்தால் புளகாங்கிதம் அடைத்து தான் நமது மாணவர்கள் தங்கள் படிப்பைத் துச்சமெனத் துறந்து தெருவில் இறங்கினார்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?….. இந்தியாவின் இறையாண்மையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கத்துடனும், இந்திய வம்சாவழியினரின் நலனுக்காகப் பாடுபடும் திண்மையுடனும் மத்தியில் எப்போது நல்லரசு உருவாகும்? அப்போது தான் நமது சகோதரர்களின் சோகம் தீரும்….
View More இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!
தணிக்கைத் துறையை விட மேலானவர்களான இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல்…. முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா? கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா? திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?….கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா? உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா? உண்மையிலேயே முகமது நபி இவ்வாறு தான் கூறினாரா?…
View More கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]
மின் உற்பத்தி நிறுவனங்களைச் செயல்படாமல் இருத்திவைப்பதன் மூலம், அதிக விலைக்கு பிற மாநிலங்களிடமிருந்தோ, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ மின்சாரம் வாங்குவதனால் அவர்களிடமிருந்து கிடைக்கும் கமிஷனுக்காகவே இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் கழகங்கள் ஈடுபடுகின்றன… இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில்… நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பழுது நீக்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் மூலம் அவற்றிலிருந்து மிக மிகக் குறைந்த செலவில் முழு அளவிலான மின்சாரத்தைப் பெறலாம் (யூனிட் 60 பைசா அளவில்)…
View More இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]
அரசு, அதன் செயல்படாத அமைச்சர்கள், செயல்திறமையற்ற அதிகாரிகள் என்ற கேவலமான கூட்டணியால் 6 கோடி மக்கள் தினமும் பரிதவிக்கிறார்கள்… மிகுமின்சார உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகத்தை, அதன் பிறகு மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் மின் உற்பத்திக்கான தேவையை சிறிதும் கவனியாமல் விதவிதமான ஊழல்களில் ஊறித்திளைத்து, மக்களைப் பெரும் அவதியில் தள்ளினர்… மத்திய காங்கிரஸ் அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கும், ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் நிச்சயம் ஏற்பட்டு விடவே கூடாது என்ற கருணாநதியின் நல்ல எண்ணமும்தான் ஒட்டுமொத்த இருளுக்கும் காரணம்… காற்றாலை, அனல்மின், நீர்மின் திட்டங்களையும் ஒழுங்காகப் பராமரிக்காமல் கவனமாக வீணாக்கியது…
View More இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]