இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்

ஹிந்துக்களுக்கென்று ஒரு தேசம் கூட பூவுலகில் இல்லை என்று கல்கி இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.. அவரது உரைகளைக் கேட்கிற கல்கிக்கு ‘அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று’ என்று எழுதுகிறார். யார் அவர்? பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, ஹிந்து மகாசபைத் தலைவர் .. அவருடன் ’கல்கி’ இரண்டு விடயங்களில் முழுமையாக உடன்படுகிறார்: ஒன்று, ஹிந்து சமூகத்தின் ஜனத்தொகை விகிதம் குறையாமலிருக்குமாறு ஹிந்துக்கள் பிறமதம் புகுவதைத் தடுப்பதற்கு ஏற்பாடு செய்தல். மற்றொன்று ஹிந்துக்களின் தேகவலிமையை வளர்த்து, ஆயுதப்பயிற்சி அளித்தல்…. இது அன்று வெகுஜன பத்திரிகையில் எழுதப்பட்டது. இன்று..

View More இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்

அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி

வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர். சுமார் 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெ.சு.மணி ஐயா பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது…

View More அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

” கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்” என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”… நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?….

View More கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?