விஶ்வாமித்ரரும் ஸ்ரீராமரை எழுப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டிய காரியம் முக்கியமாயிருக்க, அதை விடுத்து , “இப்படி அழகிய பிள்ளையைப் பெற்ற கௌசல்யாதேவி என்ன நோன்பு நோற்றாள் கொலோ ! “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்?… தழிஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்றாம். போரில் அழிவுதரும், பகைவர் படைக்கலங்களை மார்பிலேற்று விழுப்புண் பெற்ற மறவரை மார்புறத் தழுவிக் கொள்ளுதல் என்பது இதில் அடங்கும்.. சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்து – செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்…
View More மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்Tag: தொல்காப்பியம்
அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்
தொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது… பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல் எவ்வாறு வழக்கொழிந்தது? …….
View More அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி
எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்… புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்… மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்….
View More ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணிகிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்
ஜெயதேவர் அபசாரம் என்று கருதி எழுதாமல் விட்ட வரிகளை அவர் வடிவில் வந்த கண்ணனே எழுதி, இராதையின் பாதம் தன் சிரசின் மேற்படுவதாகப் பாடி, அது அபசாரமன்று, அதுவே தனக்கு உவப்பானது எனக் குறிப்பால் உணர்த்தினான் என்பது வரலாறு […] உமைஅம்மையின் திருவடியில் ஐயன் விழுந்து வணங்கினான் என்று வெளிப்படையாகக் கூறாமல், அவன் சென்னியிலே இருந்தனவெல்லாம் அவள் திருவடியிலே மணந்தன என்று கூறுயது ஒரு நயம். [..] தமிழ்ச்சைவப் புலவர்கள் இத்தகைய அகப்பொருள் பாடல்கள் சிவபரத்துவத்தை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை என்றறிந்து கவியின்பத்தில் திளைக்கின்றனர் [..]
View More கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்அற்றவர்க்கு அற்ற சிவன்
‘புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன்’ என்று கலைஞர் ஒருகாலத்தில் எழுதிய திரைப்பட வசனம் இந்த இயற்கை நியதி உலக நியதியாகும் போக்கினை எடுத்துக் காட்டுகின்றது….
…கம்யூனிசம், கேபிடலிசம் முதலிய இசங்களின் வளர்ச்சியை இந்த இயற்கை நியதியின் அடிப்படையில் காண முடியும். இயற்கையான தன்னலம் பேணுதலுக்கு இந்த ‘இசங்கள்’ தத்துவார்த்தங்கள் கற்பிக்கின்றன.
View More அற்றவர்க்கு அற்ற சிவன்வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1
கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள், வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.
View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1