நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

போகப் போகத் தெரியும் – 42

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்… உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.

View More போகப் போகத் தெரியும் – 42

போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.
-பக்.283/திராவிட இயக்க வரலாறு”

View More போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

போகப் போகத் தெரியும் – 23

சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான்… ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.

View More போகப் போகத் தெரியும் – 23

போகப் போகத் தெரியும்-20

இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு. இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது…
…. இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்…

View More போகப் போகத் தெரியும்-20

போகப் போகத் தெரியும்-17

‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்…
இந்தச் சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள். இவர்களெல்லாம் விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள்.

View More போகப் போகத் தெரியும்-17

போகப் போகத் தெரியும் – 5

பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.

மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை…

View More போகப் போகத் தெரியும் – 5