இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..
View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?Tag: பாப விமோசனம்
பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்
சாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது ….கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை…
View More பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்