பாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார் மறைமலையடிகள். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம் 🙂 … பாரத நாட்டைப் பாடுவமே – பரமா னந்தங் கூடுவமே –
முனிவர்கள் தேசம் பாரதமே – முழங்கும் வீரர் மாரதமே – பாரத தேசம் பேரின்பம் –
பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் – வந்தே மாதர மந்திரமே – வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே… வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக….
Tag: பாரத அன்னை
ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்
நுளையர், திமிலர், சாலர், உமணர் நெய்தல் மக்கள். சங்க காலத்திலிருந்தே நமக்கான பழங்குடி பெயர் பரதவர் என்பது தெரியுமா உனக்கு? நாம் பாரத தேசத்தின் பரந்து விரிந்த கடற்கரையின் எல்லை காவலர்கள். இந்த இறையாண்மையை நாளும் பேணி காப்பவர்கள். பாரதத்தாய் அவள் எல்லோருக்கு தாய். அவளிடம் அநீதி இல்லை. ஆனால் அவள் பாதம் அமர்ந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் மட்டும் ஏன் தொடர்ச்சியாய் நம் மேல் இந்த ஓரவஞ்சனை?… நாம் களங்கப்பட்டு நிற்கிறோம் என்கிறார் ஜோ டி குருஸ்… நெய்தலின் பட்டு நிற்கும் களங்கம் பாரத மக்கள் ஒவ்வொருவர் மீதுமான களங்கம். பாரத அன்னையின் மீது அன்னியப்பட்டு நம்மை ஆண்ட பிரிட்டிஷ் இந்திய நேருவிய மேட்டுக்குடிகள் நம்மீது சுமத்தியுள்ள களங்கம்….
View More நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்எழுமின் விழிமின் – 13
ஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்… அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?…
View More எழுமின் விழிமின் – 13