நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்

morning_hindutva

புஞ்சை நற்றுணையப்பர் கோவில் திருநனிபள்ளியில் உள்ளது. திருஞான சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த திருத்தலம்.

பாலையாக இருந்தது ஊர். சம்பந்த பெருமான் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கி பாலையாக இருந்த ஊரை நெய்தலாக மாற்றினார்.

sambandarகடல்வரை யோதம்மல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே.

இங்கு உறையும் இறைவன் பெயர் நற்றுணையப்பன். தாயார் பெயர் பர்வத ராஜகுமாரி. தமிழகத்தில் உள்ள ஒரு மீனவ சமுதாயங்களில் ஒன்று: பர்வத ராஜகுலம். வியாசர் அவதரித்ததும் மீனவர் குலத்தில்தான். சிவன் படகோட்டியதும் மீனவர் குலத்தில்தான். அண்ணாமலை தீபம் ஏற்றும் முதல் உரிமை கொண்டதும் தமிழக மீனவர் குலம்தான். சமவெளி சமுதாயத்துக்கும் நெய்தல் சமுதாயத்துக்குமான உறவு பின்னாட்களில் சீர் கெட்டது. தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாரதத்தின் நெடும் கடல் கரையின் இப்பெருங்குடிகள் அன்னிய நாடுகளால் தாக்குண்டனர். சமவெளியிலோ சொந்த நாட்டில் அன்னியராக காணப்பட்டனர். மிக கொடுமையான சூழல்கள் அவர்களை சூழ்ந்துள்ளது. இது தேச நலனுக்கே நல்லது அல்ல.

இந்த சூழலில்தான் நெய்தலின் ஆன்மாவை மீட்டெடுத்து  பாரத பண்பாட்டு பெருவெளியில் அதற்குரிய பெரும் சிறப்பு மிக்க இடத்தை கொடுக்க ஒரு குரல் எழுகிறது.  இன்று அன்னியப்பட்டு நிற்கும் நெய்தல் இளைஞனிடம் கேட்கிறார் ஜோ டி குருஸ்:

நமக்கான video6குடியுரிமை, வாழ்வாதார உரிமை, முடிவெடுக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது என்பது உனக்கு தெரியுமா? நம் வாழ்வு பற்றிய தெரிதலோ நம் கலாச்சாரம் பண்பாடு பற்றிய புரிதலோ இல்லாத யாரோ ஒருவன் நமக்கான வாழ்க்கை முறைமையை வகுப்பதா?…

கடலுக்கும் நீர் நிலைக்கும் நம் முகத்தையும் நிலத்துக்கு நம் முதுகையும் காட்டிக் கொண்டு நிற்கிறோமே! அது ஏன் என்று ஒருநாள் ஒரு பொழுதாவது சிந்தித்திருக்கிறாயா?

நெய்தல் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை… ஏனென்றால் அவர்களின் இருப்பே பதிவு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்… அப்படி பதியப்படும் போது அன்னியப்பட்டு நிற்கும் நம் நெய்தல் சகோதரர்களே அதை கண்டு பதறுகிறார்கள்… நம் பிள்ளைகளே நம் பிள்ளைகளுக்கு எதிராக நம் ஊர்களே நம் ஊர்களுக்கு எதிராக நம் பண்பாடே நம் பண்பாட்டு எதிராக… எப்படி பிளவுண்டு கிடக்கிறோம் என்பதை உணர்ச்சி பெருக்குடன் கூறுகிறார் ஜோ டி குரூஸ்…

அவர் எழுப்பும் வினா நெய்தல் சமுதாய நாளைய தலைமுறை இளைஞனை முன்வைத்து. ஆனால் அந்த கேள்வி ஒவ்வொரு ஹிந்துத்துவனின் மனசாட்சியிடமும் வைக்கப்படும் கேள்வி. அவர் கூறுவதை கேளுங்கள்:

நுளையர், திமிலர், சாலர், video15உமணர் நெய்தல் மக்கள். சங்க காலத்திலிருந்தே நமக்கான பழங்குடி பெயர் பரதவர் என்பது தெரியுமா உனக்கு? நாம் பாரத தேசத்தின் பரந்து விரிந்த கடற்கரையின் எல்லை காவலர்கள். இந்த இறையாண்மையை நாளும் பேணி காப்பவர்கள். பாரதத்தாய் அவள் எல்லோருக்கு தாய். அவளிடம் அநீதி இல்லை. ஆனால் அவள் பாதம் அமர்ந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் மட்டும் ஏன் தொடர்ச்சியாய் நம் மேல் இந்த ஓரவஞ்சனை?

நெய்தல் இளைஞனுக்காக அவர் சொல்லும் பதில். நமக்கும் சேர்த்துதான். நம் இருப்பின் விஸ்தீரணம் நமக்கு தெரியவில்லை. அன்னியப்பட்டு நிற்கும் நெய்தல் சகோதரர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள். அவர்களின் காயங்கள் நம் ஒவ்வொருவரின் காயங்கள். அவர்கள் சந்திக்கும் அவமானங்கள் இந்த தேசத்துக்கு பாரத அன்னைக்கு இழைக்கப்படும் அவமானம். அவர்கள் என சமவெளி மக்களால் சொல்லப்படும் ஆனால் நம்மில் நாமாகிய நெய்தல் மக்கள் யார்? ஜோ டி குரூஸ் கூறுகிறார்:

joe1

நம் உள்ளுணர்வுக்குத் தெரியும். நீயும் நானும் யார் என்பது. நானும் நீயும் இந்த மாபெரும் பாரத கலாச்சாரத்தின் பிள்ளைகள். தம்பி. வலைவீசு புராணமும், கந்த புராணமும், மகாபாரதமும் நமது புராணங்கள்.

47நமக்கு ஆன்மிகம் பற்றிய அறிவுரையோ அல்லது வழிமுறையோ அன்னியன் வந்து புகட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

இன்று நீயும் நானும் ஏற்றுக் கொண்ட ஆன்மிக பாதை, பண்பட்ட நமது தாராள சிந்தனையால், மற்றவரையும் மதித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தால் வந்தது என்பது தெரியுமா உனக்கு?

ஆனால் அந்த பக்குவம் மறுபரிசீலனை செய்யபப்டாத அந்த பக்குவம் இன்று நம்மை எப்பேர்பட்ட படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது என்பதை உணர்வாயா நீ? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம். நாம் மதித்து ஏற்றுக் கொண்ட ஒரு ஆன்மிக கோட்பாடு நமது பண்பட்ட வாழ்வின் நெறிமுறைகளையே சிதைத்து சின்னாபின்னமாக்கி நம்மையும் ஒரு அடிமை போல் ஆக்கி வேடிக்கைப் பார்த்து கை கொட்டி சிரிக்கிறது தம்பி.

நுணுகி நோக்கினால் நம் தொப்புள் கொடி உறவு அயோத்தி வரை செல்கிறது என்பதை அறிவாயா நீ? இம்மாபெரும் பாரத கலாச்சாரமே நம் பரத கலாச்சாரத்தின் விழுமியங்களில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயா நீ?

மாயையிலிருந்து வெளிவருவதற்கு இதுவே தருணம்…இதை தவறவிட்டுவிட்டால் வருங்காலம் நம்மை மன்னிக்காது என்கிறார் ஜோ டி குருஸ். செம்மறி ஆடுகளாக வாடகை தலைமைகளை ஏற்றிருந்த நிலை மாற வேண்டும் என்கிறார். நெய்தலுக்கான சுதந்திரத்தையும் நீதியையும் வேண்டி எழும் இந்த குரல் ஒவ்வொரு இந்துத்துவனின் நெஞ்ச குகையில் அனலை ஏற்றியாகவேண்டும். நெய்தலுக்கு எதிரான வரலாற்று புறக்கணிப்பு எனும் களங்கம் நம் ஒவ்வொருவர் மீதும் இருக்கிறது. இன்றுவரை நீதியும் உறவும் புறக்கணிக்கப்பட்டு வாழும் நெய்தலின் மக்களும் இந்த தேசத்தின் குடியுரிமை பெற்ற மக்கள் என்கிற உணர்வு சமவெளி மக்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதை சுட்டுகாட்டுகிறார். பாரதியின் அமரத்துவ வரிகளை தம் உணர்ச்சி பொங்கும் குரலில் கூறி தம் சர்வதேச நெய்தல் தின செய்தியை அளிக்கிறார் ஜோ டி குரூஸ்.

video17

ஒவ்வொரு பாரதியனுக்குமான இந்த செய்தியை அளிப்பதில் தமிழ்ஹிந்து வலைத்தளம் பெருமை அடைகிறது. கர்வம் கொள்கிறது. ஜோ டி குருஸ் இருக்கும் திசை நோக்கி அவர் பாதம் பணிகிறோம். இதோ அவரது கம்பீர குரலில் இதயத்தின் உணர்ச்சியுடன் அவர் சொல்வதை நீங்களே கேளுங்கள்:

நாம் களங்கப்பட்டு நிற்கிறோம் என்கிறார் ஜோ டி குருஸ்… நெய்தலின் பட்டு நிற்கும் களங்கம் பாரத மக்கள் ஒவ்வொருவர் மீதுமான களங்கம். பாரத அன்னையின் மீது அன்னியப்பட்டு நம்மை ஆண்ட பிரிட்டிஷ் இந்திய நேருவிய மேட்டுக்குடிகள் நம்மீது சுமத்தியுள்ள களங்கம். அந்த களங்கத்தை துடைக்க இந்துத்துவ அக்னி, நெய்தலின் விடுதலையின் நீதியின் ஜோதியாக எழும்பட்டும். ஜோ டி குரூஸின் தலைமை நெய்தல் மக்களுக்கு மட்டுமல்ல சமவெளி மக்களுக்கும் தேவை.

நாளை மீண்டும் தேநீருடன் சந்திப்போம். வந்தே மாதரம்!

 

9 Replies to “நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்”

 1. நெய்தல் மக்கள் நம் ரத்த சொந்தங்கள். பரதவ சகோதரர்களை இந்த இந்துத்துவ சமுத்திரத்தின் அரண்கள். அவர்களை நாம் ஒரு நாளும் விட்டுக்கொடுக்க கூடாது என ஒவ்வொருவரும் பாரத அன்னையின் பாதத்தில் சத்தியம் செய்வோம். ஜோ. டி.குரூஸ் போன்றவர்கள் பாவிகளிடமிருந்து பரதவ சமூக மக்களை மீட்பதற்காக இறைவனால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள். இவர் போன்றவர்கள் இருக்கும் திசை நோக்கி நமஸ்காரம் செய்கிறேன்.

 2. நிலத்தை இயல்பின் பாற்பட்டு நால்வகையாகப் பிரித்து அதில் கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் என்று குறித்தது தமிழ்ப் பண்பாடு. மிக நுட்பமாக கடலையுமே வாழ்நிலமாகக் குறித்து மீனவமக்களை பெருமைக்குள்ளாக்கியிருக்கிறது. இதன் பிரக்ஞை இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருத்தபோது நம் நெஞ்சத்துக்கு அருகே ஒலிக்கும் குரலாக குரூஸ் அவர்களின் குரல் ஒலிக்கிறது. இதை முன்னிலைப் படுத்திய அரவிந்தன் அவர்களுக்கு நன்றி.

 3. குறிப்பட்டிருக்கும் சம்பந்தரின் பாடல் பதம் பிரித்து

  கடல்வரை ஓதம் மல்கு கழி கானல் பானல்
  கமழ்காழி என்று கருதப்
  படுபொருள் ஆறு நாலும் உளதாக வைத்த
  பதியான ஞானமுனிவன்
  இடுபறையொன்ற அத்தர் பியன் மேலிருந்து இன்
  இசையால் உரைத்த பனுவல்
  நடுவிருளாடும் எந்தை நனிபள்ளி உள்க
  வினைகெடுதல் ஆணை நமதே

  இதன் ஆங்கில உரை.

  The backwaters which is full of hill like large tides and boats,
  and the surrounding gardens spread the fragrance – such
  cIr kAzi, in which the things to be thought about – the six
  angas and four vedas – have been kept (in esteem). By the
  muni of wisdom (cambandhar), in rhythm with the beats,
  sitting on the back of father, the song of enchanting melody
  that was told, when the n^anipaLLi of our Father, Who dances
  in the mid-night, is thought with melting heart, the destruction
  of the vinai (karma) is certain. We swear !

  from:
  https://www.shaivam.org/siddhanta/thisl/thisl405.htm

 4. ஆஹா!
  இன்றைய தேனீர் இஞ்சி போட்டு ஜிவ்வென்று இருந்தது !
  உறக்கத்தின் பாதிப்பிலிருந்து விழித்தெழ …
  வெகு சுகமான விழிப்பு !!

  ஜோ டிக்ரூசும் ஜோ அமலனும் ஒருவரேதானோ ?

 5. namsthe sri AN
  should we not recollect the fact that two spiritual leaders have actually addressed this .
  ma amirthananthamayi- a gem from neithal community itself and
  sri jeyendra saraswathi swamigal who has visited them time and again and won them over.
  regadrs

 6. ஜோ டி குரூஸின் குரலில் சத்யம் ஒலிக்கிறது. அதற்கு வலிமை அதிகம். இது நிச்சயம் பெரிய தாக்கத்தை அனைத்து இதயங்களிலும் ஏற்படுத்தும் என எண்ணுகின்றேன். அதே சமயம் போலி மதசார்பின்மை போன்றே இந்த நாட்டின் கலாசாரம், சகிப்புத்தன்மை போன்றவற்றை சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் இதனை எடுத்துக் கையாண்டால் நிலைமை சீர்கெடும். உங்களைப் போன்றவர்கள் சரியான புரிதலை மக்களிடையே இன்னமும் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

 7. ஸ்ரீ அ.நீ அவர்களின் அருமையான அறிமுகம்.

  நந்திதேவரின் திருவடிக்கீழ் நீறு பூசிய நெற்றியுடன் சிவநிர்மால்யத்துடன் காட்சி தரும் ஸ்ரீ. ஜோ.டி.குருஸ் அவர்களுடைய பணி வரும் தலைமுறைகளுக்கு வளமளிப்பதாக.

  தன் வேரை அடையாளம் கண்டவரும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பவரும் பாக்யவான் கள்.

  ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பல மாதங்களுக்கு முன் பகிர்ந்த ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வருகிறது.

  புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

  இவரைப் போன்று அர்ப்பணிப்பு பாவம் மிகுந்த அன்பர்களை நினைவிலிறுத்தி எமது மனங்களையும் வசுதைவ குடும்பகம் என்ற படிக்கு சமூஹ இணக்கப்பணியில் பணிப்பிக்கவும் எமது செயல்பாடுகளும் சமூஹ இணக்கத்திற்கு வழிவகுக்கவும் வள்ளிக்கு வாய்த்த மணாளனை இறைஞ்சுகிறேன்.

 8. பரதவர் வாழ்வியலை பரதகண்டமெங்கும் பறைசாற்றும் கொற்கை தந்த கோமகன் ஜோ டி க்ரூஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 9. பொற்கைக்கு விருது கிடைத்தது நம் தமிழினம் முழுமைக்கும் அளிக்கப்பட்ட கவுரவ மாகவே கருதுகிறேன். குரூசுக்கு நம் பாராட்டுக்கள். குரூசைப் பற்றி எழுதிய அரவிந்தன் நீலகண்டன் சிறந்த பணியை செய்துள்ளார். இறைஅருள் உங்களுக்கு மேலும் பெருகுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *