தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!
View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதைTag: மாதவி
உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19
மணிமேகலை யாரு? மாதவி என்ற பேரிளங்கொடிக்குப் பிறந்த துவண்டுவிழும் கொடி. பூத்துக்குலுங்கும் மலர். போதவிழ்ந்து தேன்சிந்தும் மலர். மலரில் தேன் வடிகிறதென்றால் வண்டு மொய்க்காதா என்ன? மணிமேகலையைச் சாதாரண வண்டா மொய்த்தது? உலகாளும் அரசவண்டு. நான் பார்த்துக்கொண்டு வாளாதிருப்பேனா? அந்த வண்டு தேன்பருகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். அமுதசுரபியாம் அமுதசுரபி! பிச்சைப் பாத்திரம்! அந்தத் திருவோட்டை மணிமேகலை கைகளிலிருந்து பிடுங்கி அந்தப் பிச்சைக்கரகள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அவளை என்னுடன் பொன்தேரில் ஏற்றிக்கொண்டு வருகிறேனா இல்லையா, பார்!
View More உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16
துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.
View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]
எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.
View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]
கணிகையர் இல்லங்களில் பிறந்த பெண்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி பாட்டி சித்திராபதி கூறுவதுபோல சகல கலைகளையும் கற்றுக்கொண்டு பேர்பெற்ற கணிகையாக ஆடம்பரவாழ்வு வாழலாம், அல்லது அம்மாவைப்போல இளம்வயதில் துறவு மேற்கொண்டு புத்தபிக்குணியாக சமயவிற்பன்னர்களுடன் ஊர் ஊராக மதம்பரப்பச் செல்லலாம். இரண்டுமே ஒரு பெண்ணிற்கு இரண்டு உச்சங்களைத்தொடும் வாழ்க்கை. இதற்கு இடையில் ஒரு வாழ்க்கை உள்ளது. உரியபருவத்தில் காதல்மணவாளன் ஒருவனைக் கைப்பிடித்து, வேதியர் வேள்விவளர்த்து, தீவலம்வந்து, இல்லறம்தொடங்கும் வாழ்க்கையே அது.
View More மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]
வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ…
View More ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]விழா அறை காதை (மணிமேகலை – 2)
முன்னொருகாலத்தில் கொடிகள் அசையும் தேர்ப்படையை உடைய சோழர்குல மன்னர் ஒருவரின் துன்பத்தைத் தீர்த்தது, நாளங்காடிப்பூதம் என்னும் பூதம். அந்த நாளங்காடிப்பூதம் இந்திராவிழா எடுத்து, அந்த இந்திரனை வணங்காத மக்களைத் தனது கோபத்தால் சிவந்த வாயினில், கோரமாக விளங்கும் பற்களினால் துன்பம் விளைவிக்கும். அதேபோல சதுக்கப்பூதம் என்றொரு பூதமும் இந்த நகரில் உள்ளது. அந்தச் சதுக்கப்பூதம் கையிலுள்ள பாசக்கயிற்றினை வீசி இந்தப் பழமைவாய்ந்த புகார்நகரில் பாவம்செய்பவர்களைப் பிடித்து உண்ணும்.
View More விழா அறை காதை (மணிமேகலை – 2)பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)
ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்… அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை…..
View More பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)