நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்Tag: மாதொரு பாகன்
மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்
நாவல் எழுதி நஞ்சு விதைத்து ஊர் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வதைத்து குற்றவாளிகளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்து கூனி குறுகி இருக்க செய்தார்கள். இந்த அப்பாவி ஊர் மக்களின் கருத்தைக் கேட்க எந்த ஊடகத்திற்கும் காதுகளோ, கண்களோ, புலன்களோ ஒப்பவில்லை…. பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். ஆற்றாது அழுத மக்களின் கண்ணீரை ஆற்ற இறைவன் ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறான். அது தான் ” ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற இயக்கம். இந்த இயக்கத்தின் மூலமாக திருச்செங்கோட்டின் தேர் திருவிழாவின் 96 மண்டகப்படி அறக்கட்டளை உள்ள சமூகங்களையும் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவை உலகே திரும்பி பார்க்கும் ஒரு சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை விழாவாக நடத்தலாம் என்று கூடிப் பேசி முடிவு எடுத்திருக்கிறார்கள்….
View More மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்“எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8
“மாதொருபாகன்” நாவல் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து, அந்த நாவல் சித்தரிப்புகளின் வரலாற்றுத் தன்மை…
View More “எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..
மாதொரு பாகன் நாவல் புத்தக எரிப்புக்கு கடும் கண்டனங்கள். எந்தப் புத்தகத்தையும் எரிப்பதோ, தடை செய்யக் கோருவதோ ஜனநாயக விரோதமான வழிமுறைகள்… தனிப்பட்ட அளவில், அந்த நாவலில் இந்து மத விரோதமாகவோ அவதூறாகவோ எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. ஆனால் சாதாரண திருச்செங்கோட்டுக் காரர்கள், அந்தக் கோயில் மீதும் தங்கள் சாதி சனங்களின் மரபுகளின் மீதும் தீவிர பிடிப்புள்ள சராசரியான மக்கள், இந்த நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தால், இத்தகைய கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் சமூகத்தையும் கலாசாரத்தையும் நாவல் அவதூறு செய்கிறது, அசிங்கப் படுத்துகிறது என்று தான் கருதுவார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… சராசரிகளின் முதிர்ச்சியின்மை அறியாமையால் வருவது. ஆனால், அறிவுக் கயவர்களின் திரிபுவாதம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டு பரப்பப் படுவது…
View More மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..