பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னர், முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் இந்த நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன….
View More ஹடயோக பிரதீபிகை – தமிழில்Tag: யோகா
நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]
“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”… “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும் இருக்கிறது. மாற்றத்திற்குள்ளாகும் விஷயங்களைப் பற்றிக்கொண்டு அவை மாற்றமில்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் முரண்பாடு”…
View More நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]நம்பிக்கை – 11: தியானம்
“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா… “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”. “ஆமாம்” என்றார் சங்கர். “அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”. “ஆமாம்” என்றாள் சௌம்யா. “அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”….
View More நம்பிக்கை – 11: தியானம்நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்
இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய வேண்டும். இதற்கு இரண்டு நிமிடங்கள் பிடிக்கும்). “அவ்வளவு தானா?” “ஆமாம். உண்மை தான். வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கச் செய்ய மிகவும் பயனளிக்கக் கூடிய பயிற்சியாகும் இது”…
View More நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது…. மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது… அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன. கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம். எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்…
View More அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்பசங்க-2: பார்க்க வேண்டிய படம்
“பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர்…
View More பசங்க-2: பார்க்க வேண்டிய படம்இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)
சாமியை தரிசனம் செய்யவும் கட்டணம் வசூலிப்பதை இந்து முன்னணி கண்டிக்கிறது… காசர்கோடு-மங்களூர் வழித்தடத்திற்காக சாலை போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலை அமைச்சும் அதை இடிக்கவிருப்பதைத் தடுக்கக் கோரி, கட்சி, மதம் கடந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணிகள் நடைபெற்றன… கௌடில்யரின் “அர்த்தசாஸ்திரம்”– இதன் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்று ஓரியண்டல் ரிசர்ச் இண்ஸ்டிட்யூட், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது… ஹிந்துக்களுக்கு இந்நாள்களில் தங்கள் மத, கலாசாரத்தின் மீதான பற்று, அதைக் காக்கவேண்டிய உணர்வு மங்கிவருவதுகுறித்து வருந்தினார்.
View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)