ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம், வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,… என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள். சொல்லப்போனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கள்ள ஆடுகள் பெருகிவிட்டன. இதற்கெல்லாம் மாற்று என்ன? லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம்? லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே! எனவே, முதலில் லோக்பால் குறித்து மக்களிடையே முழுமையாக விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும்.
View More லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2Tag: லோக்பால்
லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு…
View More லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்
முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கான காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.[…]ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.[…] இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும்.
View More லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்