ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்.

கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்…

View More ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

கண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல உவமைகளின் மூலமாக வேதாந்த தத்துவத்தின் ஆழமான கருத்துக்களை படிப்படியாக அற்புதமாக விளக்கிச் செல்கிறது…

View More ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

வேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்

மதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய முறையில் அரிய கருத்துகளைத் திரட்டி சாதாரண மக்கள் நோகாவண்ணம் கற்கத் தருவாரேயானால், நீங்களே இந்த அம்மையாரின் சிறப்பை ஊகித்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த தெளிவு இவர் இயற்றிய வேதாந்த சாஸ்திர பலதிரட்டுப் பாடல் நூலில் தெரியவருகிறது…

View More வேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்

பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…

View More பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்