ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை…. மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது… பாராளுமன்றம் கூடும் போதெல்லாம், அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கதையாகவே வெளி வருகிறது. பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையிலும் ரூ1,86,000 கோடி ஊழல் என மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது….
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2Tag: ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்… பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் மோசடி ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து…. இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம் அளவுக்கு நிலக்கரி ஊழல் என்ற ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது…
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1ராகுல் காந்தியின் காமெடி பேட்டி
ராகுல் காந்தி கூறியிருப்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவில்லை. ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியவில்லை. பாராளுமன்றம் முடக்கப்பட்டதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர், நீதி மன்றம் தெரிவித்த கருத்தின் காரணமாகவும் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உலகறிந்த உண்மையாகும்…. ராகுல் காந்தி அவர்களே, தாங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். தாங்கள் 1984-ல் டெல்லில் நடந்த கலவரத்திற்கு தாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதில் வேடிக்கையாக அமைந்த்து…
View More ராகுல் காந்தியின் காமெடி பேட்டிநாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய…
View More நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்
ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….
View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்….. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு… தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை…
View More 2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்மண்குடமும் பொன்குடமும்
கண் முன் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தன்னைத் தானே எரித்துக்கொண்டதா?… பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்… ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர்… குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?… வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.
View More மண்குடமும் பொன்குடமும்ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…
அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….
View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்
ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்…. ஊழல் செய்த நபர்களை விட்டுவிட்டு வெறும் ஊழலுக்கு எதிராக எனும் வசதியான நிலைப்பாட்டை உருவாக்குவதை பார்க்கிறேன்…எல்லா பெரும்போராட்டங்களுக்கு பிண்ணணியிலும் ஒரு திரைமறைவு ஆட்டம் இருக்கத்தான் செய்யும்…சிவில் சொசைட்டி பஜனை கேட்கும் இடத்திலெல்லாம் உணர்ச்சி வசப்படாமல் உன்னிப்பாக அதன் போக்கை கவனிப்பது நல்லது..
View More அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ
இன்னல்கள் அனுபவிக்கிறது உன் குடும்பம். இசை விழா நடத்துகிறது இத்தாலிய குடும்பம்.
View More கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ