பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்Tag: ஹிந்து அறிவியக்கம்
கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்
மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….
View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்
கடந்த சில வருடங்களாக ஜடாயு எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம் கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன….
View More காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்
இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. … நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது. இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர்… 2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?…
View More இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்இந்துத்துவம் என்றால் என்ன? – கட்டுரைப் போட்டி
இந்திய தேசிய நலன் நாடும் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வரும் Centre Right India…
View More இந்துத்துவம் என்றால் என்ன? – கட்டுரைப் போட்டிதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
தோள்சீலைக் கலவரம் நடக்கத் தூண்டிய சமூக-பொருளாதார-அரசியல்-காலனிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர்கள் அடுக்குகின்றனர்… ஏன் இப்படி ஒரு பொய்யான சித்திரத்தை கட்டமைத்தார் கால்டுவெல்?… ஒசரவிளையில் அமைந்துள்ள இந்த லிங்கஸ்தானமே ஐயா வைகுண்டர் தர்மயுக அரசாட்சி நடத்துதற்குரிய அரியாசனம் எனக் கருதப்படுகிறது… சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்கு இருக்கும் புறக்கணிப்பு நிலையைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் அவர்களது உரிமைக்காகப் போராடுவது போல, அவர்களை தங்கள் இந்திய விரோத நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
View More தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]